ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

அர்த்தமற்ற விவாதங்களும் அர்த்தமுள்ள ஹிந்துமதமும் -4

4-inside

கேள்வி: ஹிந்துக்களின் தர்ம நூல்கள் ஜாதி வித்யாசம் காட்டுகிறதே ? வர்ண பேதங்கள் மணிதனை உயர்த்தியும், தாழ்த்தியும் கேவலப் படுத்துகின்றனவே ? புருஷ சுக்தத்தில் சூத்திரன் காலில் தோன்றியவன் என்று இழிவு படுத்துகிறதே ?

பதில்: ஜாதி என்பது பிற்காலத்தில் ஏற்பட்ட சமூக மற்றும் தொழில் சார்ந்த அமைப்புகள்தானே தவிர, ஹிந்து தர்மங்களால் பரிந்துரைக்க பட்டவை அல்ல. சனாதன தர்மத்தில், வர்ணம் என்பது வலியுறுத்தப்படுகிறது, முதன் முதலாக ரிக் வேதத்தின், புருஷ சுத்தத்திலும் இது சொல்லப்படுகிறது. மனு தர்மமும் இதைத்தான் வலியுறுத்துகிறது, புராணங்களும் இதைத்தான் சொல்கின்றன. மனுதர்மத்தை பற்றியும் அன்னிய ஆதீக்கத்தால் எற்பட்ட ஜாதி வேறுபாடுகளை பற்றியும் பிரிதொரு பதிவில் பார்ப்போம்.

வர்ணம் என்றால் என்ன ?

வர்ணம் என்பதற்கு தன்மை, வகை, தரம் அல்லது பிரிவு எனப் பொருள்படுகிறது. அது நான்கு வகைப்படுகிறது.

ப்ராமணன் எனும் தன்மை இறைவனை உணரும் தன்மையை குறிக்கிறது. பொருள்சார்ந்த உலகத்திலேயே கரைந்து விடாமல், விழிப்புணர்வுடன் இறைவனை உணர்பவன் ப்ராம்மணன். இருப்பதிலேயே இதுதான் உயர்ந்த நிலை. தர்மத்தை பரிபாலிப்ப‌து, எது தர்மம் என்பதை வேதாந்த‌ ஆராய்சியால் எடுத்துரைப்பது இவர்கள் கடமை. விழிப்புணர்வை குறிக்கும் சத்வ குணத்தை இது குறிக்கிறது.

சத்ரீயன் என்று சொல்லப்படுகிற தன்மை. ஆளுமையை மற்றும் நிர்வாகத்தை குறிக்கிறது. தர்மத்தை காப்பாற்றுவதும், அதர்மத்தை எதிர்ப்பதும் இவர்களின் தலையாயக் கடமை. சத்வ குணம் கலந்த ரஜோ குணம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.

வைசிய தன்மை நாட்டுக்கும், சமூகத்துக்கும் பொருள் ஈட்டுவதை குறிக்கிறது. இது தமோ குணம் கலந்த ரஜோ குனம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.

சூத்திரன் எனும் தன்மை அடிப்படை வேலைகளை குறிக்கிறது. சூத்திரதாரி என்றால் ஒன்றிற்கு அடிப்படையாய், ஆதாரமாய் இருப்பவன் என்பது பொருள். ஆக சூத்திரன் ஆதாரமான பல வேலைகளை செய்கிறான். மற்ற மூன்று வர்ணத்தாருக்கும் இவன் ஆதாரமாய் இருந்து உதவுகிறான். ரஜோ குணம் கலந்த தமோ குணத்தை அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.

ஆக பிராம்மணன் மற்றவர்களை விட சிறந்தவன் ஆகிறான் அதனால்தான் விராட புருஷன் எனும் பரம்பொருளுக்கு அவன் தலையாக இருக்கிறான், சத்ரியன் காப்பதற்கும், அதர்மத்தை அழிப்பதற்கும் உரிய கரங்களாக இருக்கிறான், வைசியன் சமூகத்தை தாங்கி பிடிக்கும் செல்வமாகிய துடைகளாக இருக்கிறான். சூத்திரன் இவர்களுக்கு ஆதாரமாய் இருக்கும் கால்களாக இருக்கிறான்.

இதை ஏன் ஒரு உடல் ரீதியான அங்கங்களாய் பாவித்தார்கள். உடலில் எந்த அங்கமும் தேவையற்றது இல்லை, ஒவ்வொன்றும் இன்றியமையாத ஒவ்வொரு பணியை செய்கின்றன என்பதை குறிப்பிடத்தான்.

இங்கே மிக முக்கியமாய் நாம் உணர வேண்டியது, வர்ணம் என்பது பிறப்பை மட்டுமே சார்ந்ததல்ல. ஒரு நல்ல குலத்தில் பிறப்பதால் ஒருவனுக்கு நல்லதை செய்யும் சூழ்நிலை உருவாவது இயற்கை. ஆனால் அவன் தன் செயல்களால் வர்ணங்களில் இருந்து வழுவலாம் அல்லது உயரலாம்.

மஹாபாரதத்தில் அஸ்வத்தாமன் எனும் பிறப்பால் ப்ராமண குலத்தில் பிறந்தவ‌ன் தன் தீய செயல்களால் தாழ்ந்த வர்ணத்திற்கு செல்கிறான். விஸ்வாமித்திரரோ ச‌த்ரிய குலத்தில் பிறந்து, பிராமணனாக தன் செயல்களால் உயர்கிறார்.
வர்ண கலப்பில் பிறந்த பலர் மிகப் பெரும் ஞானிகளாய் இருப்பதும் பல உண்டு. வேத வியாசரும், விதுரரும் இதற்கு நல்ல சான்றுகள்.

சூத்திரன் என்கிற தன்மையில் (ஜாதியில் அல்ல) பிறந்து தன் முயற்சியால் ஒருவன் பிராமணனாக ஆகலாம்.

கர்ணண் சூத்திரனாக அவன் செய்யும் தேரோட்டும் செயலை வைத்து கருதப்படுகிறான். அவனை அங்க தேசத்துக்கு அரசனாக மாற்றி ஒரு நிமித்தில் அவன் வர்ணத்தை சத்ரியனாக துரியோதணன் மாற்றுவது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

சாந்தோக்ய உபநிடத்தில் சத்யகர்மாவின் கதை வர்ணம் என்பது குணங்களை தழுவி இருக்கிறதே தவிர, பிறப்பை அல்ல என்பதை ஆணித்தரமாக சொல்கிறது. சத்யகர்மா ஒரு பிரம்மச்சாரியாக விரும்புகிறான். அவன் தன் தாயிடம் கேட்டாலும் அவளுக்கு அவனின் தந்தை யார் என்பது தெரியாது என்கிறாள். சத்யகர்மா கௌதமர் என்ற குருவிடம் சென்று த‌ன் தந்தை பெயர் தனக்கு தெரியாது என்பதையும் தான் ஞானத்தை அறிய விரும்புவதாகவும் சொல்கிறான். அதை கேட்ட அவர் உண்மையை மறைக்காமல் சொல்பவனும், சத்தியத்தை தேடி அலைபவனுமே பிராம்மணன், ஆக அவன் யாரின் மகன் என்பது தேவையில்லை என்று அவனை சீடனாக ஏற்றுக்கொள்கிறார்.

பூமியில் எங்கு, எப்படி, பிறந்தாய் என்பவதை விட எதை விரும்பி, எப்படி செயலாற்றி, எதுவாக மாறுகிறாய் என்பதே முக்கியம் என்பதை இவை தெளிவாக்குகின்றன.

Comments

comments

Posted under: அதர்மம் அகற்று, பதிவுகள், மிஷநரிகளின் நரித்தனங்கள், வஹாபிய விஷ வலைகள்

Tagged as: , , , , , ,

Comments are closed.