என் நண்பர் ஒருவர், எப்போதும் கிறிஸ்தவத்தை பற்றி எழுதுகிறாய் , ஏன் இஸ்லாம் மதத்தை பற்றி எழுத பயமா என்று கேட்டார்.
பொதுவான ஒரு சமூக தளத்தில் இயங்கும் போது, நமது கருத்துக்கள் எப்படி எடுத்து கொள்ளப்படும் என்ற பயம் உள்ளது.
கிறிஸ்தவம் என் வீடு தேடி வருகிறது,கதவை தட்டி துண்டு காகிதங்களை கொடுக்கிறது. எம் மக்களை இடை விடாமல் துரத்துகிறது. எங்கள் குழந்தைகளிடம் விஷத்தை விதைக்கிறது வீதி தோறும் போஸ்டர் அடித்து ஒட்டி தன்னை ஒரு விளம்பர பொருளாக அறிவிக்கிறது.
எனவே அது எங்கள் தவறு அல்ல. என்னை தேடி வருவதால் , என்னுள் எழும் கேள்விகளை பதிவுகின்றேன். அது கிறிஸ்தவத் மத மாற்றிகளின் தவறு , இவர்கள் செய்வதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் தேவாலயங்களின் தவறு அது.
இஸ்லாம் இவ்வாறு வருவதில்லை, என் வீட்டு கதவை தட்டுவதில்லை.ஆனால் இந்த தேசத்தின் வரலாற்று பக்கங்களை ஆதரமாக கொண்டால், அதன் வருகை கண்டிப்பாக நிகழும். கதவை தட்டுவதற்கு பதில் அது உடைக்க கூட செய்யும். இன்று இல்லை என்றாலும் ஏதாவது ஒரு தளத்தில் நாம் இஸ்லாமை எதிர் கொண்டே ஆக வேண்டும்.
நம் கண் முன் எதிரே இருப்பவர்களை பற்றி நமக்கு கவலை இல்லை. இஸ்லாம் எங்கள் நேர் முன்னே உள்ளது.
நம் பின்னே நிற்பவர்களை பற்றி தான் கவலை கொள்ள வேண்டும். இங்கே கிறிஸ்தவம் பின்னே நிற்கிறது.
எல்லா தேசத்திலும் , எதிரே நின்ற கிறிஸ்தவம் , இந்தியாவில் மட்டும் கிறிஸ்தவ மத மாற்றிகளால் பின்னே போய் நின்றது.
ஏன் என்றால் ஹிந்து மதம் எப்பொழுதும் துணிந்தே நிற்கும் . இன்னும் இலட்சம் வருடங்கள் போரிட்டாலும் இந்தியாவில் இருந்து ஹிந்து மதத்தை அழிக்க முடியாது. இந்தியாவில் பிறந்தாலும் ,புத்த மதத்தால் ஹிந்து மதத்தை விழுங்க முடியவில்லை. எப்படி கடலில் எல்லா ஆறுகளும் கரைந்து விடுமோ அது போல, புத்த மதம் ஹிந்து மஹா சமுத்தரத்தில் கரைந்து போனது.
இதை இஸ்லாதை விட கிறிஸ்தவமும், அதன் மத மாற்றிகளும் நன்றாக புரிந்து கொண்டது.
எதிர்த்து நின்றால் எமனாக காட்சி தந்த ஹிந்து மதம், தோழமை கொண்டால் ஒரு குழந்தை மனதோடு தோழனாகும்.
அதனால் எதிர்ப்பதை கை விட்டு, உறவாடி கெடுத்தார்கள்.
நம் வரலாற்றை இருட்டிப்பு செய்தார்கள். கிறிஸ்தவம் ஆப்ரிக்காவில் செய்த கொடுமைகளையும், உலகு எங்கும் இருந்த பூர்வ குடி மக்களை அழித்த செயல்களையும் , மிக திறமையாக இந்திய மக்களின் காதில் விழாதவாறு சில வருடங்கள் முன்பு வரை மறைத்தார்கள்.
நடிகர்களை கூட்டி , “பார் இவர் இயேசுவை ஏற்று கொண்டு விட்டார்” என்று விளமபர படுத்தினார்கள். ஒருவர் இஸ்லாத்திற்கு மாறிய பின்னர் ஹிந்து மதத்தின் சாதி குறியீடுகளை எந்த இடத்திலும் குறிப்பிடுவதில்லை.
ஆனால் கிறிஸ்தவ மத மாற்றிகள் எப்படியாவது கிறிஸ்தவத்தை புகுத்த வேண்டும் என்ற காரணத்தினால் இறைமகனரின் இறை வார்த்தையை புறக்கணித்து சாதி அடையாளங்களை கிறிஸ்தவத்தில் அனுமதித்தனர்.
ஒரே தெய்வம் இயேசு , மேரி மாத உடனும் , அந்தோனியார் உடனும் தனது கடவுள் இடத்தை பகிர்ந்தார். கிறிஸ்தவ மத மாற்றிகள் அதையும் அனுமதித்தனர். இஸ்லாம் இது மாதிரி அனுமதிப்பதில்லை
.
கிறிஸ்தவ மத மாற்றிகள், மேரி மாதாவை தான் ஹிந்துக்கள் மாரி அம்மன் என்று வழிபட்டனர் என்று கதை சொன்னார்கள். ஏசுவிற்கு முற்பட்ட பரசுராமர் காலத்தில் தான் மாரியம்மன் வழிபாடு தோன்றியது என்ற வரலாறை ஹிந்து மக்கள் , தங்கள் புனித நூல்களில் இருந்து எடுத்து காட்டியவுடன் , ஹிந்து மக்களின் புனித நூல்களை கதை என்றனர். அப்பொழுது உங்கள் பைபிளும் கதையா என்று எம் மக்கள் கேட்டவுடன் , சிறுபான்மை அஸ்திரத்தை தங்கள் கையில் எடுத்து, எங்களை ஹிந்து மக்கள் இழிவு படுத்துகின்றனர் என்று ஊளையிட்டனர்.
கிறிஸ்தவ மத மாற்றிகள், ஹிந்து மக்களின் கடவுள்கள் வெளி தேசத்து மக்களின் கதைகளில் இருந்து உருவாக்கப்பட்டது என்று கதை சொன்னார்கள். எங்கள் மக்கள், ஏசுவிற்கு முற்பட்ட கிருஷ்ணரக்கும் , ஏசுவிற்கும் உள்ள பல ஒற்றுமைகளை சுட்டி காட்டி, உங்கள் இயேசுவின் கதை, எங்கள் கிருஷ்ணரிடம் இருந்து எடுக்கப்பட்டது என்று கேட்ட போது, கிறிஸ்தவ மத மாற்றிகள் கோபம் கொண்டனர்.
கிறிஸ்தவ மத மாற்றிகள், பைபிளில் சொல்ல பட்ட நகரம், இன்னும் உள்ளது என்று வரலாற்று ஆதரமாக காட்டும் போது ஹிந்துக்கள் கண்ணை மூடி கொண்டு ஒத்து கொள்ள வேண்டும்?
ஆனால் மஹா பாரத போரில் , பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்ட தமிழகத்து பாண்டிய மண்ணின் பெயர் குறிப்பிடபட்டுள்ளதை சுட்டி காட்டி, தமிழரின் வரலாற்று தொன்மையையும் , ஹிந்து மதத்தின் வரலாற்று தொன்மையையும் நாம் ஆதராமாக சொன்னால் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள்.
இந்த தேசம் எதோ கிறிஸ்தவம் வந்த பிறகு தான் முன்னேறியதாக கதையை பரப்புகிறார்கள்
மேற்கு நாட்டான் , விண்வெளி பயணம் மேற் கொண்ட பிறகே, நவகிரக கோள்களை பற்றி அறிந்தான். ஆனால் எங்கள் ஹிந்து மதம், நவக்கிரகங்கள் பற்றி மிக சரியாக எல்லா கோவில்களிலும் அமைத்து ,எல்லா கிரகத்திற்கும் மிக சரியான நிறத்தை சொன்னவர்கள்.
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் எங்கள் மதத்தின் புனித நூல்களை , கதையாக்க முயன்றால், நாங்களும் உங்கள் பைபிளை கதையாகவே கருதுவோம்.
மீண்டும் சொல்கிறேன், நான் கிறிஸ்தவத்தை நோக்கி போக வில்லை, அது என்னை தேடி ஒரு குள்ள நரி போல , கிறிஸ்தவ மத மாற்றிகளால் வருகிறது. அதுவும் ஞாயிற்றுக்கிழமை, இந்த கிறிஸ்தவ மத மாற்றிகள் பண்ணும் அட்டகாசம் இருக்கிறதே.
எனது ஷு ஸ்டாண்டில் வந்து இயேசுவின் படம் அச்சிட்ட , துண்டு காகிதங்களை வைத்து விட்டு போகிறார்கள். கடவுளே, ஆண்டு காலண்டரில் இறைவன் படம் இருந்தால் , அந்த ஆண்டு முடிந்தவுடன் , அதைத் எடுத்து போட மனமில்லாமல், பாதுகாப்பாக வைக்கும் கலாச்சாரம் நம்முடையது.
மிதி அடிகள் வைக்கும் இடத்தில, மத மாற்றதிற்கான துண்டு பிரசாரமும், அதில் இறைமகனரின் படம், எப்படி இருக்கும் நமக்கு. பதறி போகிறது மனது.
கிறிஸ்தவ மத மாற்றிகளுக்கே , இயேசு கடவுளா என்று சந்தேகம் உள்ளது, அதனால் தான் எப்போதும் இயேசு கடவுள், கடவுள், என்று போஸ்டரிலும் , டிவியிலும் திரும்ப திரும்ப சொல்லுகிறார்கள்.
எங்கள் பாரத தேசம். பல இறை அவதாரங்களை ஈன்ற தேசம், இன்னும் நிறைய வரும். இறைவனுக்கு பிடித்த தேசம் இது. ஜெருசலமில் நடந்ததும் ஒரு அவதாரமாக இருக்கலாம்.
ஒரு அவதாரத்திற்கு இந்த கிருஸ்தவ மத மாற்றிகள் இவ்வளவு அலப்பறை செய்கிறார்கள் என்றால், நாங்கள் எவ்வளவு செய்ய வேண்டும்.
தமிழில் ஒரு பழமொழி உள்ளது,
“நிறை குடம் தளும்பாது, குறை குடம் தளும்பும்”.
நிறை குடமாய் நின்ற இறைமகனரை இங்கே குறை குடமாய் மாற்றியது யார்?
Post by Suganthan Rajamanickam