ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

தர்ம விழிப்புணர்வு அறக்கட்டளை

10841556_489975474477309_614921891_n எது எல்லாவற்றுக்கும் தலையானது ? எதை அனைத்திலும் சிறந்ததாக கொள்ளப்படுகிறது ? எது இந்த பிரபஞ்சத்தின் ஆதாரமாக இருக்கிறது ? ஆழ்ந்து யோசித்தால் தர்மமே என்பது விளங்கும். தர்மம் காப்பவரை தர்மம் காக்கும் என்பது நம் வேதங்கள் சொல்லும் சத்தியம். ஆனால் அந்த தர்மத்தை காப்பது எப்படி ? என்பதே நம்முள் எழும் கேள்வி !
தர்மம் காப்பது என்பது இலவசமாக உணவையோ, பொருட்களையோ தருவது இல்லை. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் தர்மம் என்பது பிச்சை போடுவது அல்ல.
தர்மம் காப்பது என்பது அதை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதே. பல ஞானிகளும், குருமார்களும், மகான்களும் ஏன் தர்மம் காப்பதை வலியுறுத்தினார்கள். ஏன் இந்த பாரதம் முழுவதும் கால்நடையாகச் சென்று அதை பரப்புவதற்காக பெரும் முயற்சிகள் எடுத்தார்கள் ?
ஏனென்றால் தர்ம விழிப்புணர்வே தலைசிறந்தப் பணியாகும். ஒருவருக்கு தான தர்மங்கள் செய்வதை விட, தர்மம் குறித்த விழிப்புணர்வு பெருகச் செய்வது மிக உன்னத அறப்பணியாகும். இலவசமாக மீன்களைக் கொடுக்காதீர்கள், மீன் பிடிக்கும் வலையைக் கொடுங்கள் என்பார்கள். நாம் மற்றவர்களுக்கு தானங்களை வழங்குவதை விட, தர்மம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகச் சிறந்தது.
மதமாற்றங்கள் பெருகி வரும் இன்றைய நிலையில் நம் தர்மம் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் பல பாமர மக்கள் மதமாற்று சக்திகளுக்கு எளிதான இலக்காகி விடுகிறார்கள். இவற்றைக் கருத்தில் கொண்டுதான் முகநூலில் 30000 உறுப்பினர்களுக்கு மேல் கொண்ட “இந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்” தர்ம விழிப்புணர்வை கடைக்கோடி மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக “தர்ம விழிப்புணர்வு அறக்கட்டளையை ஏற்படுத்தியது. இதன் மூலம் பல தன்னார்வத் தொண்டர்களுக்கு தர்ம விழிப்புணர்வில் பயிற்சி தந்து, அவர்கள் மூலமாக தர்ம விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தி, கடைக்கோடி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. மாணவர்களுக்கு தர்ம விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை செறிவூட்டி, அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு தர்ம விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் பல தர்ம விழிப்புணர்வு செயல்களிலும் ஈடுபட திட்டம் தீட்டி வருகின்றோம்.
இந்த உன்னத முயற்சிக்கு உங்கள் பங்களிப்பைத் தாருங்கள். நீங்கள் வகுப்புகள் நடத்த முன்வரலாம், நிதி அளிக்கலாம், அல்லது இவற்றிற்காக மற்றவர்களைத் தொடர்பு கொண்டு உதவலாம்.
நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட கணக்குக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம்.

Dharma Awareness Trust
A/c. No. 6288260922
Indian Bank – East Tambaram Branch
Branch Address: No. 149, Bharata Matha Street, East Tambaram,Chennai – 59
IFSC Code: IDIB000T004

தர்மம் காப்பவரை தர்மம் காக்கும் !

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *