ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

எல்லையற்றதை எண்ணுகிறேன்…. எழுதுகிறேன் !!

boundless - 1ஒருமுறை என் ப்ராடஸ்டன்டு நண்பர் ஒருவர், சிலையை வணங்குவது பெரும் தவறு என்றார். நான் கேட்டேன் சிலையை வணங்குவது தவறு ஆனால் கூட்டல் குறியை வணங்குவது மட்டும் சரியா ? இது என்ன நியாயம் ? என்றேன். அவர் வாயடைத்து போனார்.

உலகத்திற்கே தத்துவ விளக்காய், ஞானச் சுடராய் திகழ்கிறது சனாதன தர்மம். பிரம்ம சூத்திரத்தையும், உபநிஷத்துகளையும், கீதையையும் படிக்கும் உலகளாவிய அறிஞர்கள் பலரும் அதன் தத்துவ ஆழத்தை கண்டு வியப்பின் எல்லைக்கே செல்கிறார்கள். நம் அறிவின் ஆழத்தை பொறுத்தே நம் தத்துவங்களின் மகத்துவம் நமக்கு புரியும்.

சனாதன தர்மம் வாளால் வள‌ரவில்லை. வறுமையை பயன்படுத்தி பெருகவில்லை. மாறாக அதன் ஈடு இனையற்ற மகத்துவத்தால் வியாபித்தது. ஆதி சங்கரர் அத்வைதத்தை நிறுவினார் என்றால் வாளை வீசியோ, ரொட்டி துண்டுகளை வீசியோ அல்ல. மாறாக பலரோடு ஆக்கப் பூர்வமான விவாதங்க‌ளை முன் வைத்து அதை ஸ்தாபித்தார்.

கிறிஸ்துவம் எப்படி பரவியது ? ரோமாபுரியில் சித்தாந்த செழுமை மிக்க மதங்கள் ஏதும் இல்லாத காரணத்தால், ‘புனித பால்’ எழுதிய சில உணர்ச்சி பூர்வமான கடித வாக்கியங்களால் ரோமாபுரியில் அது பலரை கவ‌ரத் தொடங்கியது. கிறிஸ்துவத்தின் அடிப்படை, சித்தாந்த செழுமையோ, தத்துவ பலமோ இல்லை, மாறாக உணர்ச்சியை தூண்டும் கதைகள்தான் அதன் பலம்.

“யேசு நமக்காக ரத்தத்தை சிந்தினார்”, “யேசுவை நெற்றியில், கைகளில் கால்களில் என ஆணியால் அடித்து துன்புறுத்தினார்கள், இருந்தும் அவர் “இந்த பாவிகளை மன்னியுங்கள்’ என்று சொன்னார்” …… இப்படி உணர்ச்சிகள் உந்தப்பட்டே அது ஐரோப்பாவில் பரவியது. அதன் பின் ஐரோப்பிய அரசர்கள் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் கொள்ளை அடிக்க நாடு பிடிப்பதும், பிடிபட்ட நாடுகள் வறுமையின் எல்லைக்கு செல்வதும், பின் அந்த வறுமையை பயன்படுத்தி கிறிஸ்துவ மதவியாபாரிகள் ரொட்டி துண்டுகளோடு உட்புகுவதும் உண்மை சரித்திரம்.

சனாதன தர்மமோ வெறும் உணர்வுகளை தூண்டி நிறுவப்பட்டது அல்ல‌. பக்தி இலக்கியங்களில் உணர்வு பிரவாகங்களை காண நேரிடலாம். ஆனால் அந்த பக்திக்கு ஆதாரமாக காரண அறிவும், சித்தாந்த செழுமையும் இருக்கின்றன‌. ஞானிகளும், குருமார்களும் சனாதன தர்மத்தின் சித்தாந்த சிகரங்களாக இருக்கின்ற‌னர். கண்ணை மூடிக் கொண்டு ஒன்றின் மேல் பக்தி செலுத்து என்று சனாதனம் கூறாது.

ஒருவர் நமக்காக மிகுந்த துண்பத்திற்கு ஆளாகியுள்ளார், ஆகையால் அவரை வணங்கு என்றால் யாரும் உடன் பட மாட்டார்கள். ஒருவர் நிறைய மாயாஜால வித்தைகளும், அற்புதங்களும் செய்துள்ளார் ஆகையால் அவர் இறைவன் என்றால் யாரும் சம்மதிக்க‌ மாட்டார்கள். “அவரின் சித்தாந்தம் என்ன ? ஆக்கப்பூர்வமாக விவாதம் செய்வோம் வாருங்கள்” என்று அழைப்பார்கள். உதாரணத்திற்கு கிருஷ்ணர் மலையை தூக்கினார், அரக்கர்களை அழித்தார், வாயை திறந்து உலகை காட்டினார் என்பதற்காக அவர் வணங்கப்படுவதில்லை. ஒப்பற்ற கீதையின் தத்துவங்களே அவரை இறைவனாக முன் நிறுத்துகிறது.

எல்லோரும் தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் அறிய முடியமா ? அதனால்தான் சனாதன தர்மத்தில் சாமான்யர்கள் குருமார்களை பின்பற்றுகிறார்கள், குருமார்களோ வேதத்தின் சாரமான‌ உபநிடதங்களை பின்பற்றுகிறார்கள். உபநிடந்தங்கள் என்பன ஒரே ஒரு தூதர் தந்த அறிவுரைகளோ, புத்தகமோ அல்ல. அவை பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு சூழ்நிலைகளில் ஞானிகளாலும், ரிஷிகளாலும் எடுத்துரைக்கப்படும் அறிவார்ந்த விளக்கங்கள்.

கண்னை மூடிக் கொண்டு நம்பிக்கை வை என்பது பாரதத்திற்கு அந்நியமான ஒன்று.

பாரதத்தின் மிக ஆழமான தத்துவங்களை அறியாத ஆப்ரகாமிய மதத்தவர்களுக்கு சனாதன தர்மம் வினோதமாய் தெரிகிற‌து. ” என்ன இது இவர்கள் மரத்தை சுற்றி வணங்குகிறார்கள், கற்சிலைகளை வணங்குகிறார்கள், பாம்பையும், பசுவையும், குரங்கையும் கூட வணங்குகிறார்கள்” என்று ஏளனமாய் பேசுகிறார்கள்.

சனாதன தர்மத்தை சமுத்திரத்தோடு கூட ஒப்பிட முடியாது. அதன் ஆழமும் அகலமும் அளக்கக் கூடியது அல்ல. பாலைவன மற்றும் மலைப்பிரதேச குக்கிராமங்களில் தோன்றிய சித்தாந்த‌ங்களில் ஊறியவர்கள் அதனை எவ்வாறு அறிந்து கொள்வார்கள் ?

boundless-2
யேசு தோன்றியதாய் சொல்லப்பட்ட காலகட்டத்தில், நாகரீகம் இல்லாத கற்கால வாசிகளாய் அவ்விடங்களில் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். நம் கரிகால சோழனோ கல்லனையை கூட கட்டி முடித்து விட்டான். “ப்ளாஸ்டிக் சர்ஜரி” என்று சொல்லப்படும் அறுவை சிகிச்சை முறைகள் நடைப்பெற்று 2000 ஆண்டுகள் (வெள்ளையர்கள் கணக்கு படி) பாரதத்தில் ஆகிவிட்டன அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய நகரங்களை அமைத்து, சிவபெருமானையும், விஷ்னு பகவானையும் போற்றி வணங்கி வாழ்ந்து வந்த, சிந்து சமவெளி நாகரீகம் ஏற்பட்டு 3000 ஆண்டுகள் முடிந்துவிட்டன (வெள்ளையர் கணக்குபடி). மெட்டலர்ஜி (Metallurgy) என சொல்லப்படும் உலோகத்துறையில் இன்றைய நிபுணர்களுக்கே மிகப்பெரும் சவாலாக விளங்கும் துருப்பிடிக்காத இரும்பு தூண் (Iron pillar) நிறுவப்பட்டு 900 ஆண்டுகள் கடந்துவிட்டன. மருத்துவத் துறையிலும், பொறியியல் துறையிலும், கணிதத்திலும் எத்தனையோ கண்டுப்பிடுப்புகளை பாரதம் உருவாக்கி விட்டது.

இன்றைய இஸ்ரேலும், பாலஸ்தீனிய பகுதிகளும் அன்று எப்படி இருந்தன ? நாகரீகம் இல்லாத மலைப் பிரதேசமாக அது திகழ்ந்தது. அரசனுக்கு எதிராய் பேசியவர்கள் சிலுவை என்று சொல்லப்படுகிற ஒரு கூட்டல் குறி சின்னத்தில் ஆணியால் அடிக்கப்பட்டனர். கல்லால் அடித்து குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். மனிதர்களை அடிமையாக விற்பதும், வாங்குவதும் பெரிய வியாபாரமாக திகழ்ந்தது. வள்ளுவர்பிரான் உலகின் ஒப்பற்ற நூலான அறத்துப் பாலை எழுதி 500 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையில், ரோமாபுரியில் போரில் தோற்றவர்களை அடிமையாக சிறைப்படுத்துவதும், சித்ரவதை படுத்துவதும் அன்றாட வழக்கமாய் இருந்து வந்தன‌. அடிமைகளை கூண்டுக்குள்ளும், வளாகத்தினுள்ளும் அடைத்து புலிகள் மற்றும் சிங்கங்களை உள்ளே அனுப்பி சண்டையிடச் செய்து ரசிப்பதும் கேளிக்கையாக இருந்தது. முதிர்ச்சி இல்லாமல் வாழ்ந்த அந்த மனிதர்களுக்கு “பொய் சொல்லாதே”, “திருடாதே”, “அடுத்தவரிடம் அன்பு செய்”, என்ற வாக்கியங்கள் உயர்ந்த தத்துவங்களாக தெரிந்தன. மிருகங்களாய் மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். கிரேக்கத்தை தவிர்த்து விட்டால் அன்றைய ஐரோப்பா காட்டு மிராண்டிகளின் கூடாரமாய் திகழ்ந்தது. பாரதத்திலோ சாண‌க்கியன் எனும் மாமேதை அர்த்தசாஸ்திரத்தை எழுதி முடித்து 400 வருடங்கள் கழிந்து விட்டன.

அப்படிப்பட்ட பாரதத்தில் எழுந்த எல்லையற்ற சித்தாந்தங்களை, புத்தகங்களுக்குள் புதையுண்டு போனவர்கள் எப்படி புரிந்துக் கொள்வார்கள் ? எல்லையற்ற இறைவனை எல்லைக‌ளுக்குள் சுருக்கி வைத்தே பழகியவர்களுக்கு, எல்லையற்ற (சனாதன) தர்மத்தை குறித்து எப்படி புரியும் ?

எல்லையற்ற சனாதன தர்மத்தை ஏன் அந்நியர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை ?

இந்தியாவில் ஊடுறுவிய இரண்டு ஆப்ரகாமிய மதங்களும் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே வளர்ந்தவை. ஒரு இறைதூதரை பின்பற்றுபவை, ஒரே ஒரு புத்தகத்தை சார்ந்தவை, ஒரு பிரதேசத்தின் வாழ்வியல் முறைகளை மட்டுமே போதிப்பவை.

அடிப்படையிலேயே இவை தங்களுக்குள் பல வகையில் முரன்படுகின்றன. உலகின் 200 கோடி கிறிஸ்துவ‌ மக்கள் பின்பற்றுவதை மற்ற‌ 150 கோடி இஸ்லாமிய மக்கள் நம்புவதில்லை. 150 கோடி மக்கள் நம்புவதை 200 கோடி மக்கள் நம்புவதில்லை. இந்த மதங்களுக்குள்ளேயே பல்வேறு பிரிவுகள், பல்வேறு நம்பிக்கைகள் நடைமுறையில் இருக்கின்றன‌. ஆப்ரிக்காவிலும், அமெரிக்காவிலும், ஆசியாவிலும் நடைபெற்று வந்த பல ஆதி மதங்களை/நம்பிக்கைகளை அழித்து, வாளை பயன்படுத்தியும், வறுமையை பயன்படுத்தியும் இம்மதங்கள் நிறுவப்பட்டன. ஆனால் இன்று லட்சக்கணக்கான மக்கள் இந்த இரு மதங்களின் இடையே ஏற்படும் சண்டைகளுக்கு பலியாகிவிட்டனர், பலியாகி வருகின்றனர்.

ஏற்கனவே குறிப்பிட்டபடி, பாரதத்தில் ஒரு சித்தாந்தத்தை நிறுவ மாயாஜாலங்களோ, அற்புதங்களோ உதவாது. நம் பண்டைய பாரதத்தில் சைவம், வைனவம், பௌத்தம், ஜைனம் என சித்தாந்தங்கள் மோதிக் கொண்டதுண்டு. ஆனால் அந்த மோதல் மிகப் பெரும்பாலும் சித்தாந்த ரீதியாக இருக்குமே தவிர வன்முறையையும், வாழ்வின் பல இன்னல்களை பயன்படுத்தி மூளை சலவை செய்தும் மதம் மாற்றும் முயற்சியாக இருக்காது.

மதங்கள் என்பவை மனிதனை நெறிப்படுத்த பிறந்த‌வை என்றால் எதற்காக மனிதர்கள் அதற்காக சண்டையிட வேண்டும் ? இதன் அடிப்படைகளை ஆராய்ந்தோமானால் பல உண்மைகள் புரிய வரும்.

எந்த ஒரு மதம் வாளை பயன்படுத்தியும், வறுமையை பயன்படுத்தியும் வளர்ந்ததோ, அதனிடம் சகிப்புத் தன்மையை எதிர்ப்பார்க்க முடியாதல்லவா ? “அறிவால் அணுகாதே, நம்பிக்கை வை” என மக்களை மாக்களாய் அல்லவா மாற்றி விட்டன இம்மதங்கள் ? உலகம் முழுவதும் தன் மதமே பரவ வேண்டும் என போதிக்கின்றன இவ்விரு மதங்களும். சனாதன தர்ம‌மோ “உலகமே நம் குடும்பம், அனைத்தும் நன்றாக இருக்கட்டும்” என்கிறது. எத்தனை வேற்றுமை பாருங்கள் ?

சனாதன தர்மத்தில், “யோக க்ஷேமம்” என்று சொல்லப்படுகிற “அனைத்து உலக நன்மையே” ஒவ்வொரு வேள்வியின் நோக்கமாக உள்ளது. அது ஒவ்வொரு கோவிலில் கூறப்படும் மந்திரங்களிலும், யாகங்களிலும் கூட ஓங்கி ஒலிக்கிறது. அவ்வளவு ஏன், பெற்றோர்களுக்கு அமாவாசை மற்றும் முக்கிய காலங்களில் தர்ப்பணம் செய்யும் மந்திரத்தில் கூட, “எவருக்கெல்லாம் தாய், தந்தை, உறவினர்கள் மற்றும் யாருமே இல்லையோ அவர்கள் இந்த தர்பணத்தால் திருப்தி அடையட்டும்” என்கிற பரந்த எண்ணம் வெளிப்படுகிறது. ஒவ்வொருவரும் அனுதினமும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த‌ப்படும் “சந்தியா வந்தனம்” எனும் சடங்கில் கூட உலக நன்மையே பிரதானமாக‌ உள்ளது.

சனாதன தர்மம் மத, இனம், நிறம் மற்றும் தேசங்களை கடந்தது. அனைத்து மக்களையும் அது ஆராதிக்கின்றது. அனைவருக்குமாக அது திகழ்கிறது. ‘பிரஹத் ஆரன்யக உபநிடத’ வரிகளே அதற்கு சாட்சி.

சர்வே பவந்து சுகினஹ, சர்வே சந்து நிராமயஹ, சர்வே பத்ரானி பஷ்யந்து, மா கஸ்சித் துக்க-பாக் பவேத் !!

அனைவரும் ஆனந்தமாக இருக்கட்டும், அனைவரும் நோயில்லாமல் இருக்கட்டும், அனைவரும் பத்திரமாக இருக்கட்டும், அனைவரும் சிறிதும் துக்கமில்லாமல் இருக்கட்டும் என்கிற உலகலாவிய சிந்தனையை எடுத்துரைக்கிறது இது..

பல ஆப்ரகாமிய கினற்று தவளைகள் திரும்ப திரும்ப சொல்வது உருவ வழிபாடு தவறு அது கூடாது என்பதைத்தான். உருவம் வைத்து வணங்கினால் இறைவன் கோபித்துக் கொண்டு நரக நெருப்பில் வாட்டி எடுப்பான் என்று வஹாபிய கூட்டங்கள் சில தங்கள் பாலைவன சித்தாந்தத்தை பறைசாற்றுகின்றன. ஒரு உருவத்தை போய் இறைவனாக எண்ண முடியுமா ? அவனை மனதால் அல்லவா உணர முடியும் என்று பெந்தகோஸ்டு தவளைகள் கூட்டல் குறியை முத்தமிட்டுக் கொண்டு மனோவசியத்தில் மயங்குகின்றன.

உருவம் என்பது என்ன ? நம் கண்களுக்கு புலப்படுவது உருவம் !!

தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள், அது கண்களுக்கு திரவமாய் தெரிகிறது. அதை குளிரவைத்தால் கண்களுக்கு திடப் பொருளாய் தெரிகிறது. அதையே சூடுப் படுத்தும் போது வாயு வடிவில் ஆவியாகி போகிறது. ஆவியாகும் போது அது நம் கண்களுக்கு புலப்படுவது இல்லை. உடனே நாம் அது இல்லை என்று முடிவெடுத்துவிட முடியுமா ?

ஒன்றிற்கு உருவம் உள்ளது, உருவம் இல்லை என்று சொல்வதை விட, கண்களால் பார்க்கக் கூடியது, கண்களால் பார்க்க இயலாதது என்பதே சரி. மனித கண்களால் பார்க்க இயலாத எத்தனையோ கதிர்கள் உள்ளன. அவற்றிற்கு உருவம் இல்லை எனச் சொல்வது நாம் அதை பார்க்க இயலாத இயலாமையைதான் காட்டுகிறதே தவிர உண்மை நிலையை அல்ல. ஆக நம்மால் பார்க்க முடியாத பலவற்றிற்கு உருவமில்லை என்று ஒதுக்கிவிடுவது நம் இயலாமைதான். இதனால்தான் அர்ஜுனனுக்கு தன் விஸ்வரூபத்தை பார்ப்பதற்கு தேவையான சிறப்பு பார்வையை (ஞான திருஷ்டியை) இறைவன் அளிக்கிறார்.

பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரும் அணுவும், இவ்வாறு மாறிக் கொண்டே இருக்கிறது. உருவங்கள் மட்டும் மாறுவதில்லை. உருவத்திலிருந்து, உருவமற்ற நிலைக்கும், உருவமற்ற நிலையில் இருந்து உருவத்திற்கும் கூட‌ மாறுகின்றன. மாறாத, அழியாத ஒன்றே ஒன்று மட்டுமே உள்ளது அதுவே சக்தி எனப்படும் ஆற்றல். அதை உருவாக்கவும் இயலாது, அழிக்கவும் இயலாது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள எதையுமே நம்மால் முழுவதுமாக உண்டாக்கவும் இயலாது, அழிக்கவும் இயலாது. நாம் செய்வதெல்லாம் இருப்பவற்றை உருவ மாற்றம் செய்வதுதான்.

உன்னால் எதையும், உண்டாக்கவும் இயலாது, அழிக்கவும் இயலாது என்பது கீதையின் வாக்கு.

ஆக உருவம் அருவமாவதும், அருவம் உருவமாவதும் இயற்கை. அதுதான் அன்றாடம் நடக்கும் நிகழ்வு. நாம் இறந்தால் நம் உடலை எரிக்கிறார்கள், எரிக்கப்பட்ட நம் உடல் நம் கண்களில் இருந்து மறைந்தாலும் அழிந்து விடுவதில்லை அது வேறு ஒன்றாக உருமாற்றம் அடைகிறது அவ்வளவே.

உங்களால் எதையுமே பார்க்க முடியாத நிலையில் எதை பார்க்கிறீர்கள் ? அருவத்தை பார்க்கிறீர்கள் என்பதல்லவா உண்மை ?

அதனால்தான் ஆப்ரகாமிய மதங்களை போல் முதிர்ச்சியில்லாமல் உருவ வழிபாடு தாழ்ந்தது, அருவ வழிபாடு உயர்ந்தது என்று சனாதன தர்மம் வலியுறுத்துவதில்லை. சொல்லப்போனால் இறைவன் உருவம் கொண்டவன் மட்டும் அல்ல, உருவங்கள் கொண்டவன். நாம் காணும் அனைத்துமாக இடைவெளி இல்லாமல் ஒவ்வொரு அணுவிலும் இருப்பவன், நாம் காண முடியாத அனைத்துமாகவும் இருப்பவன்.

அவனை உருவமாய் பார்ப்பவர்களுக்கு உருவத்தோடு காட்சி தருகிறான். அவனை அருவத்தோடு பார்பவர்களுக்கு அருவமாய் காட்சி தருகிறான்.

இதையே அற்புதமாக முன்நிறுத்துகிறார் நம்மாழ்வார்

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வுருகள்

அதாவது “உருவமுள்ள, உருவமற்ற என இரு தன்மைத்தாய் உள்ள அனைத்தும் அவனே!
மற்றும் அவை அனைத்தையும் தன்னுள் அடக்கியவாறு ஒரு சிறு இடத்தில் கூட இல்லை என்னாதபடி
ஒழிவின்றி – அனைத்து இடங்களிலும் பரந்துள்ளான்” என்கிறார் நம்மாழ்வார்.

எல்லையற்ற இறைவன் உருவ அருவ பேதங்களை கடந்த‌வன். இங்கு அங்கு எனாதபடி இடைவெளி இல்லாமல் எங்கும் பரவி நிற்கிறான் இறைவன். அற்ப மனிதன் தன் இயல்புக்கு தகுந்தவாறு அவனை பல உருவங்களில் வணங்குகிறான்.

உருவ வழிபாட்டை ஏளனம் செய்யும் ஆப்ரகாமிய அடிப்பொடிகள் அதன் அடிப்படைகளை உணர்வதில்லை. இறைவனுக்கு தான் வணங்கும் உருவம் ம‌ட்டுமே உண்டு என்று எந்த இந்துவும் சொல்வதில்லை. இதுவும் இறைவனின் எண்ணிலடங்காத உருவங்களில் ஒன்று என்றே ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்த ஒவ்வொரு மூர்த்தியை வணங்குகிறார்கள்.

சிலருக்கு உக்கிர காளியோ, உக்கிர நரசிம்மரோ இஷ்ட தெய்வம், சிலருக்கு அழகே உருவான முருகனோ, ராமபிரானோ, விநாயகரோ இஷ்ட தெய்வம். சிலரோ லிங்க வடிவில் அல்லது ஜோதி வடிவில் இருக்கும் சிவபெருமானை பிரதானமாய் வணங்குகிறார்கள். சிலருக்கு தாயாரோடு கூடிய பெருமாள் அல்லது ராதையுடன் கூடிய கிருஷ்ணர் இஷ்ட தெய்வம். அவரவர் தன்மைக்கு ஏற்ப அவரவருக்கு ஒவ்வொரு இஷ்ட தெய்வம் உண்டு. அளப்பறிய இறைவன் பலவிதமாக‌ பாவிக்கப்பட்டு வணங்கப்படுகிறான். ஒவ்வொரு மூர்த்தியும் இறைவனின் எல்லையற்ற அற்புத குணங்களை ஒவ்வொரு விதமாய் பிரதிபலிக்கின்றன. இறைவனின் பலவிதமான அற்புத குனங்களை உணர்த்துவதாகவே சிலைகள் உருவாக்கப்படுகின்றன.

அதனால் தான் வேதம் “ஏகம் சத், விப்ரஹ பஹுதா வதந்தி” என்கிறது. அதாவது இறைவன் ஒருவன் அவனை அறிஞர்கள்/பண்டிதர்கள் பலவாக பார்க்கிறார்கள்/கூறுகிறார்கள் என பொருள் படுகிறது. முன்னர் நான் எழுதியபடி, இங்கே நாம் கவனிக்க வேண்டியது ‘விப்ரஹ’ என்கிற “அறிஞர்கள்/பண்டிதர்கள்” எனும் வார்த்தையை. அவர்களை முட்டாள்கள் என வேதம் குறிப்பிடவில்லை மாறாக கற்றவர்கள் என்றே கூறுகிறது. அதாவது இறைவனை பல கோடி அண்டங்களில் இருக்கும் பலவிதமான உயிரினங்கள் பல விதமாக பார்ப்பது இயற்கை என்பதை அது தெளிவுபடுத்துகிறது.

சுவர் இல்லாமல் எப்படி சித்திரம் இல்லையோ அது போலவே மன லயிப்பு இல்லாமல் பிரார்த்தனை இல்லை. சிலருக்கு இறைவனின் நாமத்தை சொல்வதில் லயிப்பு ஏற்படுகிறது, சிலருக்கு அவனின் நாமத்தை கேட்பதில் இருக்கிறது. சிலருக்கு அவனுக்கு அர்ப்பனிக்கப்பட்ட பிரசாதத்தை உண்பதில் லயிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு அவனை தன் இஷ்ட வடிவில் தரிசிப்பதால் லயிப்பு ஏற்படுகிறது.

உருவமும், அருவமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை, ஒன்று இல்லாமல் மற்றது இல்லை. உருவ வழிபாடு இல்லையென்றால் அருவ வழிபாடும் இல்லை. அருவ வழிபாடு இல்லையென்றால் உருவ வழிபாடும் இல்லை.

அப்படியென்றால் இறைவனுக்கு உருவம் இல்லையா என்று கேட்கலாம். இறைவனின் உண்மையான உருவம் “ஸ்வரூபம்” என்று சொல்லப்படுகிறது. அதாவது அனைத்தையும் தன்னகத்துள் கொண்டதாக அது உரைக்கப்படுகிறது. அந்த ஸ்வரூபம் நம் புறக்கண்களால் காணக்கூடியதல்ல. இந்த ஸ்வரூபமானது நாம் கண்களால் காணக் கூடிய ரூப/அரூபங்களை (அதாவது உருவ/அருவங்களை) குறிப்பது அல்ல.

உருவ அருவ பேதங்களை எப்படி இறைவன் கடந்தவனோ அது போலவே ஒருமை மற்றும் பண்மைகளை கடந்தவன். அதனால்தான் இறைவன் ஒருவனாகவும் இருக்கிறான் பலவாகவும் இருக்கிறான். அதைதான் “திருவாசகம்”, “ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க”. என்று சிறப்பாக குறிப்பிடுகிறது. அதாவது ஒருவனாகவும், பலவாகவும் உள்ள இறைவனை போற்றுவதாக குறிப்பிடுகிறது.

ஒரு பள்ளிக்கூட‌ மைதானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் அகலம் எவ்வளவு, அதன் நீளம் எவ்வளவு என்பதை நீங்கள் வரையறுத்துவிடலாம். பள்ளியில் என்ன விளையாட வேண்டும், எப்படி விளையாட வேண்டும் என்றும் நீங்கள் குறிப்பிட்டு விடலாம். ஆனால் பிரபஞ்சத்தை அவ்வாறு வரையறுக்க‌ முடியுமா ? பள்ளிக் கூட மைதானத்தையும், பிரபஞ்சத்தையும் எப்படி ஒப்பிட இயலாதோ அது போலவே ஆப்ரகாமிய மதங்களையும், சனாதன தர்மத்தையும் ஒப்பிட இயலாது.

ஒரு பள்ளிக்கூட‌ மைதானம் போல இரு ஆப்ரகாமிய மதங்களிலும் தெளிவான‌ வரையறைகள் இருக்கும். அதன் கொள்கை என்ன, அதை வெளிப்படுத்தியவர் யார். விளையாடும் மாணவர்களுக்கு தருவது போல் ஐந்து மற்றும் பத்துக் கட்டளைகள். பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்க நெறிகளை கற்பிப்பது போல் இதைத்தான் செய்ய வேண்டும், இப்படித்தான் நடக்க வேண்டும் என்கிற கட்டளைகள். பாடம் பயில் இது அவசியமானது. ஆனால் எல்லையற்றதை நோக்கி செல்ல இவை போதுமா ? எல்லையற்ற நிலையை அறிந்துக் கொள்ள, எல்லையற்ற ஒன்றை அல்லவா நாம் பற்றிக் கொள்ள வேண்டும் ?

சனாதன தர்மமோ எல்லையற்ற பிரபஞ்சம், அது எல்லையற்ற சுதந்திரத்தை ஆதாரமாக கொண்டது. சுகமும், துக்கமும் நம்மை மாற்றி மாற்றி சூழ்ந்து பிடித்துக் கொண்டிருக்கும் இந்த அடிமை தளத்திலிருந்து விடுபட்டு உண்மையான பரிபூரன சுதந்திரத்தை நோக்கி நம்மை அது கொண்டு செல்லும். (இதை குறித்து விரிவாக பிறகு பார்ப்போம்)

எல்லையற்ற சனாதன தர்மத்தில் இறைவன் எல்லையற்ற தோற்றங்களில் வணங்க‌ப்படுகிறான். அதோடு அருவமாகவும், உருவமாகவும் பலவகையில் அவன் வழிபட படுகிறான். இறைவன் எங்கோ ஒரு மூலையில் மட்டும் இல்லை இறைவன் எல்லா உயிர்களிலும் இருக்கின்றான் என்கிறது வேதம் ( ஈஷ்வரா சர்வ பூதானாம்) இறைவன் இடைவெளி இல்லாமல் எல்லாவிடத்திலும் பரவி இருக்கின்றான் என்றும் அது சொல்கிறது. (ஈஷாவாஸ்யம் இதம் ஜகத்)

தன்னை வெளிப்படுத்தாத பரப் பிரம்மமாக (Unmanifested Brahman) பலர் அவனை அருவமாக பாவித்து வணங்குகிறார்கள். அவனை தங்களுக்கு பிடித்த வகையில் சிலைகளாகவும், ஜோதியாகவும், லிங்கமாகவும், சாலிகிராமம் போன்ற படிமங்களாகவும் அவனை வணங்குகிறார்கள்.

அது என்ன வெளிப்படுத்தாத பரப் பிரம்மம் ? வேதம் இதை “ஹிரன்யகர்பா” என்று அழைக்கிறது. அதாவது ‘தங்க முட்டை’ அல்லது ‘தங்க கருவறை’ என்று இது பொருள்படும். எது எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கிறதோ, எதிலிருந்து எல்லாமே தோன்றியதோ அதுவே “ஹிரன்யகர்ப” என்று அழைக்கப்படுகிறது. இந்த வெளிப்படுத்தாத நிலையில் அந்த பரப்பிரம்மம் தன்மைகள் அற்று இருக்கிறது. அதனிடமிருந்தே அனைத்தும் வெளிப்படுகிறது.

சரி அப்படியென்றால் இந்த பரப்பிரம்மம் அல்லது இறைவன் ஒன்றா அல்லது பன்மையா ?

“ஏகம் ஏவத்விதியம் பிரம்மா” என்கிறது சாந்தோக்ய உபநிஷத். அதாவது இறைவன் இரண்டாவது இல்லாத ஒன்றே ஒன்றுதான் என்கிறது. வேத வாக்கியங்களை புரிந்து கொள்ள வெறும் மொழிப் புலமை மட்டும் போதாது. ஆழமான ஆன்மீக விழிப்புணர்வே அதற்கு அவசியமாகிறது. அதனால் தான் மிகசிறந்த ஞானிகளால் மட்டுமே அவற்றிற்கு பாஷ்யங்கள் (உரை) தர முடிகிறது. சில அரைவேக்காட்டு ஆப்ரகாமிய அறிஞர்கள் இந்த வாக்கியங்களை மட்டும் குறிப்பெடுத்துக் கொண்டு இறைவன் ஒன்றுதான் அவனை சிலைகளாக, அவதாரங்களாக, பல கடவுளர்களாக பார்ப்பது வேதத்திற்கு எதிரானது என்று மனநோயாளிகளை போல் பேசுகிறார்கள்.

இறைவன் ஒருவனே என்றால் அவன் பன்மையில் இல்லையா என்கிற கேள்வி எழுகிறது ?

இறைவன் சத் எனப்படும் அனைத்து பொருளாக‌ இருக்கின்றான், சித் எனப்படும் உணர்வாகவும் இருக்கின்றான், ஆனந்தம் எனப்படும் ஆனந்த நிலையிலும் இருக்கின்றான் என்கிறது வேதம். அதையே “சச்சிதானந்த” நிலை என்கிறோம். அவன் இல்லாத இடமே இல்லை, அவன் இல்லாத உருவமே இல்லை இப்படி அவன் எங்கும் வியாபித்து ஒருமை பண்மைகளுக்கு அப்பாற்பட்டு இருக்கிறான். எண்ணிக்கைகளுக்கு அடங்காத எல்லைகளற்றவன் இறைவன். அவனை நீங்கள் ஒருவன் என்றும் சொல்லலாம், பல என்றும் சொல்லலாம்.

சுருங்கச் சொன்னால் நம் காரண அறிவால் அறிந்துக் கொள்ள முடியாதவன் இறைவன்.

காரண அறிவால் இறைவனை அறிந்துக் கொள்ள முடியாது என்பது ஏன் ?

கணக்கிடக் கூடிய ஒரு எண்ணை நாம் கூட்டி விடலாம். மில்லியன், பில்லியன், ட்ரில்லியன் என பல பெரிய எண்ணிக்கைகள் உள்ளன. ஆனால் கணக்கிட முடியாத “இன்ஃபினிடி” என்று சொல்லக் கூடிய தொகையை கூட்ட முடியுமா ?

ஆங்கிலத்தில் முடிவில்லாத எண்ணிக்கையை இன்ஃபினிட்டி (Infinite) என்று அழைப்பார்கள். அதை யாரேனும் அளக்க இயலுமா ? சரி இதை படிக்கும் கணித மாணவர்களை கேட்கிறேன். இன்ஃபினிட்டியை ஒரு ஆயிரம் கொடி ட்ரில்லியனால் கழித்தால் எவ்வளவு வரும் ? (ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடியை குறிக்கும்)

கணித மேதைகள் பலர் வந்தாலும் இன்ஃபினிடியை அளந்து தர இயலுமா என்றால் இல்லை என்பதே பதில் ? எண்ணி முடியாது என்பதால் தான் அது “இன்ஃபினிட்டி”

எந்த ஒரு எண்ணிக்கையையும், அதே எண்ணிக்கையோடு கழித்தால் பூஜ்யம் என்பதே பதிலாக வரும் அல்லவா ? அப்படியேனில் இன்ஃபினிட்டியை, இனிஃபினிடியால் கழித்தால் எவ்வளவு வரும் ? “ஏஷ்லே” போன்ற கனிதவியலாளர்கள் அதற்கு “வரையறுக்க முடியாது” (Undefined) என்பதை பதிலாக தருகிறார்கள்.

ஆனால் வேதம் இதற்கு பதில் தருகிறது. “பூர்னமத பூர்னமிதம் பூர்னாத் பூர்ன முதச்யதே, பூர்னஸ்ய, பூர்னமாதாய பூர்னமேவ‌ வஷிஷ்யதே !!”

அது பூரணமாக உள்ள்து, இது பூரணமாக உள்ளது. பூரணத்தில் இருந்து பூரணம் பிறக்கின்றது. பூரணத்திலிருந்து, பூரணத்தை எடுத்துவிட்டால், மீதம் இருப்பது பூரணமே என்கிறது. “இன்ஃபினிட்டி” எனப்படும் பூரணத்துவத்தினை எத்தனை கூட்டினாலும் கழித்தாலும் அதன் தன்மை மாறாதது போல், இறைவனும், பூரணமானவன் அவன் ஆற்றல் எப்போதுமே குறைவதோ கூடுவதோ இல்லை.

அது போலவே வான‌வியாலர்களையும், பிரபஞ்ச ஆராய்ச்சியாளர்களையும், இந்த பிரபஞ்சத்தின் அளவு என்ன என்று கேட்டால் “சொல்ல இயலாது” என்பார்கள். இதன் எல்லைகளை யாராலும் கணிக்க இயலாது என்பதே உண்மை. பல கணித கோட்பாடுகள் மூலம் அளக்கப்படும் பிரபஞ்ச அளவுகள் கூட மொத்த பிரபஞ்சத்தையும் குறித்த அளவுகள் அல்ல. நாம் நம்முடைய பால்வெளியில் (நம்முடைய நட்சத்திர மண்டலம்) இருந்து காணக்கூடிய பிரபஞ்சத்தின் ஒரு பகுதியின் தோற்றத்தையே அளவிடுகிறார்கள். அதைத்தான் ஆங்கிலத்தில் அப்செர்வபில் (Observable Universe) என்று சொல்கிறார்கள்.

அது ஏன் “இன்ஃபினிட்டி” ஆகட்டும், பிரபஞ்சத்தின் முழு தன்மைகள் குறித்தாகட்டும் நம்மால் காரண அறிவால் புரிந்துக் கொள்ள முடிவதில்லை ?

நம் காரண அறிவு எல்லைகளுக்கு உட்பட்டது. எதையுமே நாம் அளந்தே பழகிவிட்டோம். எல்லாவற்றையும் அகலம், நீளம், உயரம், எடை, சுற்றளவு, காலம் என்று காரண அறிவு கொண்டு அளந்தே பழகிவிட்டோம். புதியதாக ஒருவரை பார்க்கும் போது நம்மையும் அறியாமல் நம் மூளை அவரை குறித்த புறத் தோற்ற அளவுகளை பதிவு செய்கிறது. ‘உருவம்’ என்று நாம் பதியும் அனைத்துமே ஒரு குறிப்பிட்ட வரையரைகளின் பதிவு தான்.

அளந்தே பழகிய நம் காரண அறிவிற்கு அளக்க முடியாதவற்றை புரிந்துக் கொள்ள இயலாது. ஒன்றை அளக்க முயன்று முடியாவிட்டால் அது அளக்க முடியாதது என்பதை மட்டும் நாம் புரிந்துக் கொள்கிறொம்.

எல்லையற்ற இறைவனை நாம் காரண அறிவால் அறிய முடியாதென்றால் பின் எப்படித்தான் அறிவது ?

எல்லையற்ற ஒன்றை நாம் அறிய அந்த எல்லையற்ற நிலையை நாம் அடைந்தாக வேண்டும்.

புனித புத்தகங்கள், குருமார்களின் உபதேசங்கள், இறைத் தூதர்கள் அறிவுரைகள், சொற்பொழிவுகள், நீதிக்கதைகள் எல்லாமே நமக்கு வழிக்காட்டிகள் மட்டுமேயன்றி இலக்குகள் அல்ல.

புத்தரை எடுத்துக் கொள்ளுங்கள். சித்தார்தன் என்கிற சிறுவன் தன் விடா முயற்சியால் புத்தரானான். அவருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தனர். அவரின் தத்துவங்களை கண்டு மக்கள் மெய்மறந்தனர். முக்தியை விஞ்ஞான அடிப்படையில் விளக்கிய பெருமை புத்தரை சேரும். பல நூறு சொற்பொழிவுகளை அவர் ஆற்றியுள்ளார். ஆனால் அவரின் ஆயிரக்கணக்கான சீடர்களின் எத்தனை புத்தர்கள் உருவானார்கள் என்றால் அது மிக மிக குறைவானதே.

ஏனென்றால் எல்லையற்ற தன்மையை நீங்கள் வார்த்தைகளால் விளக்கி விட முடியாது. அது உணரப்பட வேண்டிய ஒன்று. எங்கே நம்முடைய தேடல்கள் நிறைவுக்கு வருகின்றனவோ அங்கே ஞானம் பிறக்கிறது. எப்போது கேள்விகள் பிறப்பதில்லையோ அப்போது முழு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது.

Science ends where philosophy starts என்று மிக அழகாக சொல்வார் சுவாமி விவேகானந்தர். எப்போது நம் தேடல்கள் முடிவடைகிறதோ அப்போது தத்துவஞானம் தொடங்குகிறது என்பது இதன் பொருள். நாம் படிக்கும் புனித புத்தகங்கள், நாம் கேட்கும் உபதேசங்கள், நாம் நம் அறிவை கொண்டு நுட்பமாக ஆராயும் வழிமுறைகள் என எல்லாமே தேடல்கள்தான். இந்த தேடல்கள்தான் ஒருவனை இலக்கை நோக்கி கொண்டு செல்லும்.

இலக்கை அடைவது என்பது அவரவர் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகின்றன. கோவையிலிருந்து சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் சிலருக்கு ரயிலில் செல்ல பிடிக்கும், சிலருக்கு பேருந்தில் செல்ல பிடிக்கும். சிலருக்கோ காரில் அல்லது விமான‌த்தில் எளிதாக சென்று அடையக் கூடிய தகுதி இருக்கும். அது போல அவரவர் தகுதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேடும் வழி மாறுபடுகிறது.

ஆதி சங்கரர் ஞான வழியில் சென்று அத்வைதம் எனும் சித்தாந்தத்தை ஸ்தாபித்தார். நான் உடலல்ல, அழிவற்ற ஆத்மா என்பதை ஒருவன் உணர்வதன் மூலமாக பரம்பொருளை அடையலாம் என்பதை நிறுவினார். ஸ்ரீமத் ராமானுஜரோ ஒருவன் பக்தி மார்கத்தில் இறைவனுக்காகவே வாழ்வின் ஒவ்வொரு கணப்பொழுதையும் அர்பணித்து, அவன் அருளாள் அவனிடம் முழுவதுமாய் சரண‌டைந்து, இறைவ‌னுக்கு நித்தியமான‌ சேவை புரியும் பாக்கியம் பெறலாம் எனும் “விஷிஷ்டாத்வைதத்தை” நிறுவினார். பல மகான்கள் மேலும் பல வழிகளை நமக்கு காட்டுகின்றனர். வழிகள் மாறலாம் ஆனால் இலக்குகள் ஒன்றே.

இதையெல்லாம் படிக்கையில், எல்லையற்ற தன்மையை அடைவது சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறதல்லவா ? அது என்ன அத்தனை கடிணமானதா ? அதற்கு மிக அவசியமானது எது?

ஒரு கதை சொல்வார்கள். நாரத மஹரிஷி பல லோகங்களில் திரிந்துக் கொண்டிருப்பவர். ஒரு முறை பூலோகத்தில் அவர் சென்றுக் கொண்டிருந்த போது ஒரு பிராமனரை சந்திக்கிறார். அவர் வேதங்கள் மற்றும் இதிகாசங்களை கற்றுணர்ந்தவர். அவர் படிக்காத தர்ம சாஸ்திரங்களே இல்லை. அந்த பிராமணர் நாரத மகரிஷியை பார்த்து எங்கு செல்கிறீர்கள் ? என்று கேட்கிறார். நாரதரும் தாம் வைகுண்டம் செல்வதாக சொல்கிறார். பிராமணர் தனக்கு எப்போது முக்தி கிடைக்கும் என்று ஸ்ரீமந் நாராயணனிடம் கேட்டருளுமாறு சொல்கிறார். அவ்வாறே நாரதர் செல்கையில் ஒரு செருப்பு தைப்பவரை அவர் சந்திக்கிறார். அந்த செருப்பு தைப்பவரும் நாரதரிடம் “மகரிஷி இன்னும் எத்தனை ஆயிரம் பிறவிகளை நான் எடுக்க வேண்டி வரும் என்று ஸ்ரீமந் நாராயணனிடம் கேட்டு அருளுங்கள்” என்கிறார்.

நாரதர் மஹாவிஷ்னுவை சந்தித்ததும், பிராமணர் மற்றும் செருப்பு தைப்பவர் கேட்ட கேள்விகளை முன் வைக்கிறார்.

மஹாவிஷ்னு புண்ணகையோடு கூறினார் “அந்த செருப்பு தைப்பவன் இந்த பிறவியின் முடிவில் முக்தியை பெற்று வைகுண்டம் அடைந்து விடுவான், அந்த பிராமணனோ இன்னும் பல நூறு பிறவிகளை எடுக்க வேண்டி வரும்”

நாரதருக்கோ திகைப்பு !! பிராமணர் சகலமும் கற்ற பண்டிதர் ஆயிற்றே அவருக்கா இன்னும் பல நூறு பிறவிகள் ?

ஸ்ரீமந் நாராயணன் புண்சிரிப்போடே பதிலுரைத்தார், “நான் ஏன் அவ்வாறு குறிப்பிட்டேன் என்று நீயே அறிந்துக் கொள்வாய், அவர்களை சந்திக்கும் போது, நான் செய்துக் கொண்டிருந்தேன் என்று கேட்பார்கள், நான் ஒரு சிறு ஊசி முனையில் இப்படியும் அப்படியுமாக ஒரு யானையை கோர்த்டு கொண்டிருந்ததாக சொல்லுங்கள்”

விடைப்பெற்று வந்தார் நாரதர். முதலில் பிராமணரை சந்தித்தார்.

“வாருங்கள் நாரதரே, வைகுண்டம் சென்று வந்ததாய் சொல்கிறீர்கள், மஹாவிஷ்னு நீங்கள் செல்கையில் என்ன செய்துக் கொண்டிருந்தார்” என்று கேட்டார் பிராமணர்.

“அவர் ஒரு ஊசி முனையில் உள்ளே இப்படியும், அப்படியுமாக ஒரு யானையை கோர்த்துக் கொண்டிருந்தார்” என்றார் நாரதர்.

“என்ன உளறுகிறீர்கள், ஒரு ஊசி முனைக்குள் எங்காவது யானையை கோர்க்க முடியுமா ? நீங்கள் நாராயணனை சந்திக்கவே இல்லை, பொய் சொல்கிறீர்கள்” என்று அவரை விட்டு விலகிச் சென்றார் அந்த பிராமணர்.

செருப்பு தைப்பவரை சந்தித்தார் நாரதர். அதே கேள்வி, அதே பதில். “ஆஹா அற்புதம், இறைவனின் லீலையே லீலை என்றார் செருப்பு தைப்பவர்.

நாரதர் திகைத்துப் போனார். “என்ன நீங்கள் இதை நம்புகிறீர்களா ? இது சாத்தியமா ? என்று கேட்டார் நாரத‌ர்.

ஏன் சாத்தியமில்லை. இதோ பாருங்கள் நான் இந்த பெரிய ஆலமரத்தின் கீழே உட்கார்ந்திருக்கிறேன். இதில் விழும் ஒவ்வொரு சிறு பழங்களின் உள்ளே உள்ள சிறு விதைக்குள் ஒரு பெரிய ஆலமரத்தை இறைவன் வைத்திருக்கின்றானே ? இப்படி எத்தனை ஆயிரம் ஆலமரங்கள் இந்த ஆலமரத்தில் இருக்கின்றன. அவனால் எதுவுமே சாத்தியம் அல்லவா ? கணக்கில்லாத அண்டங்களை வாணத்தில் மிதக்கவிட்டிருக்கின்றானே அவனால் எதுவும் சாத்தியம் அல்லவா ? என்று கேட்டார் செருப்பு தைப்பவர்.

நாரதருக்கு மஹாவிஷ்னுவின் தீர்ப்பு புரிந்தது. பிராமணர் தர்ம‌ நூல்களை வரட்டு தனமாக கற்றறிந்தவர். செருப்பு தைப்பவரோ காரண அறிவோடு பலவற்றை உணர்ந்து அதன் பயனாக இறைவன்பால் ஆழமான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டவர்.

ஆக எத்தனை படித்தீர்கள் என்பது முக்கியமல்ல. அப்படி படித்ததன், அறிந்ததன் விளைவாக இறைவன் மேல் எத்தகைய ஆழமான நம்பிக்கையை கொண்டிருக்கிறீர்கள் என்பது முக்கியம். மேலே குறிப்பிட்ட இரண்டுமே எல்லையற்ற தன்மைக்கு மிக முக்கியமாகிறது. ஒன்று காரண அறிவு, மற்றது ஆழமான, அசைக்க முடியாத நம்பிக்கை.

எல்லையற்ற தன்மைக்கு நம்மை எடுத்து செல்ல காரண அறிவும் அந்த காரண அறிவால் ஏற்படும் நம்பிக்கையும் அத்யாவசியமாகிறது என்று பார்த்தோம். தன் காரண அறிவால் இறைவனின் மேன்மையை உணர்ந்த செருப்பு தைப்பவரின் கதையை பார்த்தோம்.

இங்கே காரண அறிவு ஏன் முக்கியமாகிறது என்கிற கேள்வி எழுகிறது. எல்லையற்ற தன்மைக்கும் காரண அறிவுக்கும் என்ன தொடர்பு உள்ளது ?

“ஜம்பூத்வீபம்” என அழைக்கப்பட்ட அகண்ட பாரத‌ தேசத்தின் அற்புதமே, அது எதன் மேலும் குருட்டு நம்பிக்கைகளை வை என்று போதிக்காததுதான். இதுதான் கடவுள், இவர்தான் இறைதூதர், இதுதான் புனித புத்தகம், இதை நம்பு. இதை எதிர்த்து கேள்வி கேட்காதே, அப்படி நீ கேட்டால் நரகத்தை அடைவாய் என்று சனாதன தர்மம் எப்போதுமே அச்சுறுத்தாது, உங்களை எப்போதும் இப்படி அடிமையாக்காது. சுதந்திரமாய் இரு, எல்லையற்ற சுதந்திரத்தையே நாடு என்பதுதான் அதன் மூச்சு.

தேடு, அலசிப் பார், ஆராய்ந்து நோக்கு, கேள்வி கேள், விவாதம் செய், அறிஞர்களையும் ஞானிகளையும் உன் அறிவைக் கொண்டு அடையாளம் கொள் என்றே அது நமக்கு போதிக்கிறது. அப்படி நீ உன் காரண அறிவால் ஒன்றை ஆராய்ந்து பற்றிக் கொண்ட பின் அதன் மேல் முழு நம்பிக்கை வை. எல்லையற்ற தன்மைக்கு உன்னை அது இட்டுச் செல்லும் என்கிறது அது .

அதனால்தான் நம் பாரதத்தில் கணக்கற்ற குருமார்கள், கணக்கற்ற ஞானிகள், கணக்கற்ற மகான்கள். எல்லையற்ற தன்மையை அடைய எல்லையற்ற வழிகாட்டிகள் தேவை அல்லவா ? அதனால்தான் குருமார்கள் அவதரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆதிசங்கரரை எடுத்துக் கொள்ளுங்கள். அத்வைதத்தை ஸ்தாபிக்க அவர் யுத்தம் செய்யவில்லை. குதிரைகளில் ஏறி வாள் வீசவில்லை. என் சித்தாந்தத்தை நீ ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டவில்லை. ஆழமான, நுட்பமான, விரிவான விவாதங்களை அவர் புரிந்தார். பல்வேறு பண்டிதர்களையும், சமய அறிஞர்களையும் அவர் தன் வாதத்தால் வென்றார். அத்வைதத்தை தேசம் முழுதும் ஸ்தாபித்தார்.

ஆதிசங்கரரை நாம் பாராட்டுகையில் அவரோடு வாதம் புரிந்தவரை அதை விட பாராட்டியாக வேண்டும். அவரோடு வாதிட்டு தோற்பவர்கள் அவர் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஏனேனில் பாரதத்தில் எந்த விவாதத்திலும் தனிநபர்கள் மோதிக் கொண்ட‌தில்லை, சித்தாந்தங்களே மோதிக் கொண்டன. எது சிறந்ததோ, அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அன்று இருந்தது. தனி மனித அகம்பாவங்கள் அன்று இல்லை. இது உலகின் வேறு எந்த நாட்டிலும் சாத்தியமா என்றால் இல்லை என்பதுதான் பதில். தனக்கு உடன்படாதவரின் தலையை கொய்ந்து வீசியே வளர்ந்தது தான் மற்ற பல மதங்களின் உண்மை சரித்திரம்.

சனாதன தர்மமோ கேள்வி கேட்டே வளர்ந்தது. எல்லையற்ற த‌ண்மையை அறியும் ஆவல் உள்ளவனுக்கு மட்டுமே கேள்விகள் பிறக்கின்றன என்கிறது கீதை. சித்தாந்தங்களின் சிகரங்களான உபநிஷத்துகள் முழுவதும் எல்லையற்ற தன்மை குறித்த கேள்விகளே அலங்கரிக்கின்றன.

சனாதன தர்மம் அர்த்தமுள்ள‌ ஆழமான, கேள்விகளினால் மேலும் மேலும் மேன்மையடைகிறது என்று பார்த்தோம்.

கேள்வி கேட்காதே நம்பு என்று சொல்லும் ஆப்ரகாமிய மதங்களை போல் அல்லாமல் கேள்வி கேட்பதை ஏன் சனாதன தர்மம் வலியுறுத்துகிறது ?

ஆழமான தேடல் உள்ளவனுக்கே கேள்வி பிறக்கிறது. கேள்வி பிறந்தால்தான் விடை அறியும் ஆவல் பிறக்கிறது. அத்தகைய ஆவலில் இருந்துதான் எல்லையற்றதை நோக்கி செல்லும் பயணம் தொடங்குகிறது. பயணம் தொடங்கினால்தான் பாதை தெரிய வருகிறது.

புகழ்பெற்ற விஞ்ஞானி டார்வின் “எந்த உயிரினங்கள் புதிய மாற்றங்களுக்கும், புதிய பயணத்திற்கும் தயாராகின்றனவோ அவையே பிழைக்கின்றன” என்கிறார். இது நம் உள்ளார்ந்த பயனத்திற்கும் மிகப் பொருந்தும். யாருக்கு கேள்விகள் எழுகின்றனவோ, யார் இடைவிடாமல் தேடலில் ஈடுபடுகிறார்களோ அவர்களே மாற்றத்தை அடைந்து எல்லையற்ற தன்மையை அடைகின்ற‌னர். மற்றவர்களோ உலக சுக துக்கங்களில் தேங்கி போகின்றனர்.

நம் சிந்தனைகள் பெரும்பாலும் பொருள் சார்ந்த உலகிலேயே தேங்கி போய் விடுகின்றன. இதனால் நமக்கு புலன் நுகர் பொருட்களின் மேல் மிகுந்த பற்று உண்டாகி விடுகின்றது. பற்று நம்மை அறியாமலேயே அதிகமாக, அதனால் ஆசை உண்டாகிறது. ஆசை நிறைவேற்றிக் கொள்ள முடியாததால் கோபமும் வெறுப்பும் உண்டாகிறது.

தீபாவளிக்காக புதிய உடைகள் வாங்க செல்கிறோம். பலவிதமான புதிய ரகங்கள் நம்மை பற்றிக் கொள்கின்றன. அவற்றை வாங்க வேண்டும் என்கிற ஆசை உண்டாகிறது. அது இயலாத போது நமக்கு வெறுப்பு உண்டாகிறது. சிலர் வரவுக்கு மீறி ஆசையால் உந்தப்பட்டு கடனை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

தீபாவளியை பொருள் ரீதியாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாக நாம் மாற்றிவிட்டதே காரணம். புத்தாடையும், எண்ணை குளியலும், பலகாரங்களையும் மீறி அது அதர்மம் அழிந்து தர்மம் தழைப்பதை உணர்த்தும் ஒரு பண்டிகை என்பதை நாம் மறந்துவிட்டோம். அது உதிக்கும் ஒவ்வொரு வருடமும் அது நம் குரோத மனப்பான்மையை அழித்து சாத்வீகமான (தூய) சிந்தனைகளை பரவச் செய்ய வேண்டும் என்கிற அதன் அடிப்படையை நாம் மறந்துவிடுகிறோம்.
ஒன்றின் உட்பொருளை குறித்து சிந்திக்காமல் மேலோட்டமாகவே பார்த்து கொண்டிருப்பதாலே இத்தகைய நிலை ஏற்படுகிறது.

ஒரு ஆன்மீக சாதகனுக்கோ ஒவ்வொரு விட‌யத்திலும் ஆழமான கேள்வி பிறந்துக் கொண்டே இருக்கிறது. இவையெல்லாம் நிலையானதா ? இவையெல்லாம் எங்கே என்னை இட்டு செல்லும் என்று அவன் சிந்தித்துக் கொண்டே இருக்கிறான்.

இத்தகைய கேள்விகளே சனாதன தர்மத்தின் புனிதமான நூல்களில் பொக்கிஷமாய் இருக்கின்றன. உபநிஷத்துகள் நமக்கு மிக உயர்ந்த சித்தாந்தங்களை தந்தது என்றால் அதற்கு இத்தகைய கேள்விகளே காரணம்.

boundless - 3

Comments

comments

Posted under: ஏன்? எதற்கு? எப்படி?, தர்ம நூல்களின் எளிய விளக்கங்கள், தர்ம‌மும் விஞ்ஞானமும், தர்மம் தலைகாக்கும், பதிவுகள்

Tagged as: ,

Comments are closed.