ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

(மத)பித்து பிடித்த பத்து கட்டளைகள்

10 commandments

யேசு பத்து கட்டளைகள் கூறியதாக சொல்வார்கள். எனக்கு தெரிந்தவரை யேசுவை வைத்து வியாபாரம் செய்யும் நம் உள்ளூர் பெந்தகோஸ்டு கம்பெனிக‌ள் உளவியல் ரீதியாக மூளையில் பத்து கட்டளைகளை தங்கள் விற்பனையாளரிடம் விதைத்து விடுவதாக தோன்றுகிறது. இந்த விற்பனையாளர்களும் அதை திறம்பட செய்வார்கள்.

அந்த பத்து கட்டளைகளையும் அதன் உள்ளார்ந்த காரணத்தையும், அதன் மார்கெட்டிங் நுட்பங்களையும் (Marketing Strategy) பார்ப்போம்.

கட்டளை 1) உங்கள் பெயரை இந்து பெயராகவே வைத்துக் கொண்டு, கூடவே கிறிஸ்துவ பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள். உதாரனத்திற்கு ‘ராபர்ட் வரதராஜன்’, ‘அந்தோனி கருப்புசாமி’ போன்றவை. (Product Branding)

உள்ளார்ந்த காரணம். ஆங்கில/கிறிஸ்துவ பெயர்கள் ஒரு அந்நிய தன்மையை உருவாக்கும். அதனால் அப்பெயர்களை ஏற்றுக் கொள்ள பலர் தயங்குவார்கள். அதை இந்து பெயர்களோடு பினைப்பதால், கிறிஸ்துவமும் பாரதத்தை சேர்ந்ததுதான் என்பதுபோல் ஒரு மாயையை உருவாக்கும். பெயரை கேட்கும் ஒவ்வொருவரும் இவர் நம்மவர்தான், ஏதோ காரணத்திற்காக மதம் மாறி விட்டார் என்பதை உணரச் செய்யும்.

2) மிக சிறப்பாக உடை உடத்திக் கொள்ளுங்கள். “டக் இன்” செய்யப்பட்டு, ஷூ அனிந்துக் கொண்டு, ஒரு பெரிய கம்பெனியின் மேலாளர் போல் மேற்கத்திய பாணியில் உடை உடுத்திச் செல்லுங்கள். (Product positioning)

உள்ளார்ந்த காரணம் : இதனால் பலியாடுகள் வீட்டுக்குள் அனுமதிப்பார்கள். இவர் ஏதோ பெரிய மனிதர் என்கிற எண்ணத்தை இது உருவாக்கும். மேலும் இறக்குமதி செய்யப்பட்டது என்றால் நம் நாட்டில் அதற்கு கிராக்கி உண்டு.

3) முடிந்தவரை ஆங்கிலம், அல்லது ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுங்கள். (Value addition)

இது மேலும் மதவியாபாரிகள் இமேஜை உயர்த்தும். இவர்கள் மிகவும் படித்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் என்று பலியாடுகளை உணர வைக்கும்.

4) ஒருவரை மதமாற்ற முயற்சியை தொடங்கும் போது (அதாவது ஊழியம் செய்யத் தொடங்கும் போது) உங்களை கிறிஸ்துவர்கள் என்று காட்டிக் கொள்ளாதீர்கள், வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளுங்கள். (Innovative product)

உள்ளார்ந்த காரணம். இது பலியடுகளுக்கு மதவியாபாரிகள் ஏதோ பொதுவாதிகள், எந்த மதத்தையும் சாராதவர்கள் என்பது போல் ஒரு எண்ணத்தை உருவாக்கும்

5) கிறிஸ்துவர்களை குறித்து யாரேனும் குறை கூறினால், ஆமாம் நீங்கள் சொல்வது சரி அவர்கள் ஆண்டவனால் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறுங்கள். அவர்கள் பாபிகள், வேடதாரிகள் என்று கூறுங்கள். எங்களுடைய சித்தாந்தம் வேறு என்று கூறுங்கள். (Product differentiation)

இதன் மூலம் கேட்பவர் ஏதோ புதியதாக தாங்கள் ஒன்றை அறிந்துக் கொள்வதாக நினைப்பார்கள். இதன் மூலம் அவர்களுக்கு கேட்பதற்கு ஆர்வம் ஏற்படும்

6) நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்களா என்று கேளுங்கள். ஏன் இப்படி வாழ்வில் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் என்று கேளுங்கள். (Problem Identification)

உள்ளார்ந்த காரணம். உலகில் பிரச்னை இல்லாத மனிதர்கள் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும். ஏதேனும் ஒரு பிரச்னையில் தீவிரமாக இருக்கும் ஒருவரிடம் அதற்கு தீர்வு இருப்பதாக குறிப்பிட்டால் அவரை எளிதில் ஆட்கொண்டு விடலாம்.

7) நாங்களும் இந்துக்களாகதான் இருந்தோம். சமீபத்தில் தான் யேசுவை ஏற்றுக் கொண்டோம் என்று கூறுங்கள்.

(மதம் மாறினோம் என்று சொல்ல மாட்டார்கள்) (Direct Advertising)

உள்ளார்ந்த காரணம். அதாவது நாங்களும் உங்களில் ஒருவர்தான். உங்களை போலதான் முட்டாள்தனமாக இருந்தோம். ஆனால் இப்போது மாற்றத்தை அடைந்து விட்டோம். (உஜாலாவுக்கு மாறிவிட்டேன் என்பது போல்)

8) அவர்களின் நம்பிக்கைகளை மென்மையாக உடைக்க தொடங்குங்கள்.

உதாரணத்திற்கு நான் நடந்துக் கொண்டிருக்கும் போது என் கால்களால் ஒரு விநாயகர் படத்தை மிதித்தேன் அல்லது ஒரு நாய் ஒரு தேருவோர சிலையின் மேல் சிறுநீர் கழிப்பதை பார்த்தேன். தன்னையே காத்துக் கொள்ளாதது எப்படி கடவுளாகும் என்று கேளுங்கள். (Combating Competition)

உள்ளார்ந்த காரணம். இப்படி சொல்வதால் மதவியாபாரிகளுக்கு தங்கள் மேல் ஒரு பரிதாபம் இருப்பது போல் பலியாடுகள் உணர்வார்கள். மேலும் இது அவர்களை திடுக்கிட வைக்கும். நாம் ஏதோ தவறு செய்கிறோமோ என்று நினைக்க வைக்கும்.

9) தொடர்ந்து செல்லுங்கள். அவர்களை தொடர்பில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்காக ஜெபியுங்கள்.

உள்ளார்ந்த காரணம். ஆரம்பத்தில் விருப்பம் இல்லாதவர்கள் கூட, திரும்ப திரும்ப அதற்கு உட்படுத்தப்படுவத‌ன் மூலமாக மாற வாய்ப்பு உள்ளது. (Repetitive implanting and Product demonstrating)

10) அவர்களை ஜெபத்திற்கு அழையுங்கள். அவர்களை ஜெபம் செய்ய வைத்து “ஆஹா நீங்கள் ஜெபித்தது மற்றவர்களை விட சிறப்பாக இருந்தது” என்று கூறுங்கள். (Product experimentation and Motivating)

தங்கள் மேல் இவர்களுக்கு எவ்வளவு அக்கறை என்று பலியாடுகளை உணர வைக்கும். தாங்கள் ஏதோ வித்தியாசமான ஒன்றை செய்து விட்டதாக உணர வைக்கும்.

Comments

comments

Posted under: அதர்மம் அகற்று, அந்நிய சூழ்ச்சிகள், பதிவுகள், மிஷநரிகளின் நரித்தனங்கள்

Comments are closed.