அதே பிள்ளையாரை ஒரு தத்துவஞானி எப்படி பார்க்கிறான்.
அவருடைய பெரிய தலையோடு கூடிய தும்பிக்கை ஓம் என்கிற ப்ரணவத்தை குறிக்கிறது. அவருடைய பெரிய காதுகள், அவரின் கேள்வி ஞாணத்தையும், வேதங்களை உணர்ந்து வெளிப்படுத்தும் ஆற்றலையும் குறிக்கிறது. அவரின் வாகணமான எலி ஆசையையும், அலைபாயும் மனதையும் குறிக்கிறது. அத்தகைய ஆசையையும், அலைபாயும் மனதையும் அடக்கி அவர் திடமாக அமர்ந்திருக்கிறார்.
அடுத்து பாற்கடலில் படுத்திருக்கும் விஷ்னுவை பாருங்கள். ஐந்து தலைக்கொண்ட பாம்புகள், ஐந்து புலண்களை குறிக்கிறது. உள்நோக்கி பார்க்கும் அந்த ஐந்து தலைகளும், உள்நோக்கி பார்க்கும் அமைதியான மனதை குறிக்கிறது. அந்த அமைதியான மனம் எதை பார்க்கிறது ? பரம்பொருளான இறைவனை பார்க்கிறது. அப்பரம்பொருள் பேராணந்த நிலையில் தன்னுடைய எல்லையற்ற தன்மையில் இருக்கிறார். அவர் எல்லையற்ற ப்ரபஞ்சத்தை குறிக்கிறார். அவரை சூழ்ந்துள்ள பாற்கடலோ எல்லையற்ற ஆணந்தத்தை குறிக்கிறது. அவரின் கரங்களில் உள்ள சக்கரம் காலச் சுழற்சியை குறிக்கிறது. அவரின் மற்றொரு கரத்தில் உள்ள சங்கு ப்ரபஞ்சத்தின் ஐந்து தத்துவங்களை குறிக்கிறது.
அடுத்து புலித்தோல் அணிந்திருந்த சிவனை பார்ப்போம். அவரின் உடல் முழுதும் பூசப்பட்ட திருநீர் கண்களுக்கு புலப்படும் ப்ரபஞ்சத்தை குறிக்கிறது, அவரின் ஆடையில்லாத திருமேணியோ, அந்த ப்ரபஞ்சத்தின் ஆதார நிலையை குறிக்கிறது. அவரின் தலையில் உள்ள கங்கை அவர் பாவங்களையும், அறியாமையையும் அழிப்பவர் என்பதை குறிக்கிறது. அவரின் தலை அருகில் உள்ள தேய்பிறை, ப்ரபஞ்சம் தோன்றுவதையும், அழிவதையும் குறிக்கிறது. அவரின் நெற்றியில் உள்ள த்ரையம்பகம் எனும் நெற்றிக் கண், அவரின் எல்லையற்ற ஞாணத்தையும், ஆற்றலையும் குறிக்கிறது. அவரின் கழுத்தில் உள்ள பாம்பு அவரின் யோக சக்தியை குறிக்கிறது. இன்னும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
லிங்கம் என்பது குறியீடு அல்லது முத்திரை என பொருள் தரும். லிங்கம் என்பது பிரமாண்டம் அல்லது ப்ரபஞ்ச மூலாதாரத்தை குறிக்கிறது. அது சத்யம், ஞானம் மற்றும் ஆனந்தத்தை குறிக்கிறது. லிங்கம் ப்ரக்ருத்தி எனப்படும் இயற்கை, புருஷா எனப்படும் இறைவனுடன் இணைவதை குறிக்கிறது. சிவலிங்கம் உருவமற்ற இறைவனை குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது. தாந்த்ரீகர்களும், மேற்கத்திய அறிஞர்களும் லிங்கத்தை ப்ரபஞ்சத்தின் விதையான ஆதாரமாகவும், அதன் பீடத்தை ப்ரபஞ்ச சக்தியாகவும் சொல்கிறார்கள். இவை எதைப்பற்றியும் அறியாமல் சில மனநோயாளிகளும் மூளை சலவை செய்யப்பட்டவர்களும் அதை தங்கள் குறுகிய எண்ணங்களால் குறுக்கி, அது வெறும் ஆண் பெண் உறவை மட்டுமே சித்தரிக்கிறது என்று சொல்வதுதான் வேடிக்கை.
இப்படி ஹிந்து மதத்தில் சிலைகள் ஒவ்வொன்றும் இறைவனின் பேராற்றலை பல்வேறு விதமாக உருவகப்படுத்தி, ஒரு பாமரனுக்கும் அதை எளிதாக கொண்டு சேர்க்கிறது. ஒரு தத்துவ புத்தகத்தை படிக்கையில் ஏற்படும் ஞானம் ஒரு சிலையிலேயே உருவகப்படுத்த படுகிறது. ஒரு பக்தன் அச்சிலையை தரிசிக்கும் போதே அதில் உருவகப் படுத்தப்பட்டுள்ள உயர்ந்த தத்துவங்கள் அவனுக்குள் உயர்ந்த எண்ணங்களை உண்டாகி அவனை செம்மை படுத்துகிறது. ஒரு வெற்று சுவரை வெறித்து பார்த்து பிரார்தனை செய்வதற்கும், உயர்ந்த தத்துவங்களை உருவகப்படுத்தி, நம்முள்ளே உயர்ந்த எண்ணங்களை உண்டாக்கும் சிலையை, வழிபடுவதற்கும் வித்யாசங்கள் இருக்கிறதல்லவா ?