ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

இயேசுவின் இரண்டாம் வருகை – தாய் மதம் திரும்புவோம் – 2

அறியாமை என்கிற இருளில் மதமாற்றம் நடைபெற்று வருகிறது. பைபிளை அப்படியே நம்பிக்கொண்டு அவர்களுக்கு போதிக்கபட்ட சில வாக்கியங்களை மட்டும் திரும்ப திரும்ப உரைக்கும் சிந்திக்க முடியாத மனிதர்களாக வலம் வருகின்றனர் நம் அப்பாவி சகோதரர்கள். அந்த பைபிளை எழுதியது யார் ? எந்த காலத்தில் எழுதப் பட்டது ? ஏன் இத்தனை வடிவங்கள் இருக்கிறது ? நீங்கள் எந்த வடிவத்தை பயன்படுத்துகிறீர்கள் ?  பைபிளில் நன்றும் தீதும் கலந்து இருக்கிறது. பைபிள் அடிமைத்தனம், கொலை, களவு, கற்பழிப்பு, குழந்தைகள் நரபலி என்று எண்ணற்ற தீயவைகளையும் ஆதரிப்பது தெரியுமா ? போன்ற கேள்விகளை எழுப்பாமலேயே கண்மூடித்தனமாக எப்படி நம்ப வைக்கப்படுகிறது ?

உலகம் அழிய போகிறது. நீங்கள் கும்பிடுவது சாத்தான். இதோ சுனாமி வந்துவிட்டது. இதோ நிலநடுக்கம் வந்து விட்டது என்று அப்பாவி மக்களை பயமுறுத்தி மதம் மாற்றுவது ஒரு நுட்பமான உத்தி. மருத்துவம் கல்வி போன்ற முக்கிய துறைகளில் சேவை செய்யும் கொடியோடு உள்நுழைந்து பாடம் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், வியாதியால் கஷ்டப்படும் நோயாளிகளுக்கும் மதத்தை போதித்து மனம் மாற்றுவது இன்னொரு நுட்பமான உத்தி. யாரும் சென்றிராத கிராமங்களுக்கு சென்று சேவை செய்கிறோம் என்று ஆரம்பித்து, புகைபிடிப்பது, மதுபழக்கம் பற்றிய படங்களை போட்டு காண்பித்து மெதுமெதுவாக நீங்கள் வைத்திருக்கும் விக்கிரகங்கள் உங்களுக்கு கஷ்டம் கொடுக்கும் என்று கூறி மெதுவாக இயேசு கிறிஸ்து பற்றி கூறி ஆண்டவரை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அப்பாவி மக்களை மதம் மாற்றுவது இன்னொரு நுட்பமான உத்தி.

துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும், மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் நடிகைகளை மதம் மாற்றி, அவர்களையே சாட்சியம் என்கிற பெயரில் மக்களுக்கு சொல்லி மதம் மாற்றுவது இன்னொரு நுட்பமான உத்தி. இவ்வாறு, ஒரு எதிரி நாட்டுக்குள் புகுந்து பிரச்சனை வராத வண்ணம் சாமர்த்தியமாக பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு மதம்மாற்றுவது அனைத்தும் வெளிநாடுகளில் வடிவமைக்க பட்ட முறைகள். பல நூறாண்டு காலமாக கிறிஸ்தவ மிஷனரிகள் சேவை என்ற போர்வையில் இந்த சமூக விரோத செயல்களை அரங்கேற்றி வருகின்றன. பாரதத்தில் வெளியில் சொல்லப்படாத போரை நடத்தி கொண்டிருக்கின்றனர் வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷனரிகள்.

பாரத திருமகன் தன் சிந்திக்கும் திறனை பயன்படுத்தி கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டால் இந்த மாயை அழிந்து விடும். நம் குல பெருமையையும் அறியவும், சிந்திக்க வைக்க சில கேள்விகளுடன் இந்த கணொளி வடிவமைக் பட்டிருக்கிறது. மதம் மாறியவர்கள் யாவரும் இந்த காணொளியை பார்க்க வேண்டும். இதை அவர்களிடம் எடுத்து செல்ல உதவுங்கள்.

 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்பது அறிவு.   –  வள்ளுவர்.

அறியாமையை அகற்றி, அறிவு ஒளியை பாரதமெங்கும் பரப்பிடுவீர்.

Comments

comments

Posted under: காணொளிகள்

Tagged as: , , , , ,

Comments are closed.