ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

இயேசு கிறிஸ்துவைத் தேடி… இரண்டாம் வருகையை நோக்கும் கிறிஸ்தவர்களே வாருங்கள்…

அன்பான பாரத சகோதர சகோதரிகளே! இயேசுவின் நாமத்தினாலே, உண்மையான இறைவனின் ஆணையினாலே, அவரின் கட்டளைக்குட்பட்டு இந்த நற்செய்தியை எழுதுகிறேன்.

நாம் வாழும் இந்த பாரத பூமி மற்றபிற நாடுகளிலிருந்து மிகவும் வித்தியாசமானதாகும். குமரிக்கண்டம் என்று சொல்லக்கூடிய குமரிக்கு தெற்கே இருந்த மாபெரும் நிலப்பரப்பில் தான் முதன்முதலில் மனிதநாகரிகம் தோன்றியதாகவும் நாம் பேசும் தமிழ் மொழியும் இங்கேதான் தோன்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். நம் நாகரீகமும், மொழியும் தொடர்ச்சியாக 11,000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறது. உலகில் மற்ற பழைய நாகரீகங்கள் அனைத்தும் அழிந்து போயின. தொடர்ந்து தாக்கிய கடற்கோள்களால் குமரி கண்டம் இன்று கடலடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்வு முடிவுகளும் இதை வலுப்படுத்துவதாக அமைகின்றன.

பல்லாயிரம் ஆண்டுகளாக செல்வ செழிப்போடு இன்பமாக நாம் வாழ்ந்த போது, நம் முன்னோர்கள் நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளிலும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து நமக்கு நன்மை தரக்கூடிய அனைத்தையும் அறிந்து அதை நாம் தினமும் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களாக்கி கொடுத்துள்ளனர். நாம் எவ்வாறு உணவு உண்ண வேண்டும் என்ற முறைகளிலிருந்து இரவு எவ்வாறு தூங்க வேண்டும் என்பது வரை யோசித்து யோசித்து நமக்கு நன்மை அளிப்பவற்றை தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார்கள். கோவில்கள் என்பது வெறும் வழிபாட்டு கூடம் மட்டுமல்ல. அது நமக்கு நோய் வராமல் தடுக்கவும், நம் ஆயுளை அதிகரிக்க செய்யும், விஞ்ஞானமும் அறியமுடியாத, முற்போக்கான தலமாக அமைந்துள்ளது. பின்னால் வந்த முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் நம் வளத்தை கொள்ளையடித்தும், நம் பண்பாடுகளை சிதைத்ததும் நம் கல்வி முறையை அழித்தும், நம்மை கொலை செய்ததையும் நாம் அறிவோம். அவர்கள் நம்மை யோசிக்கவே விடாமல், அவர்கள் இடும் கட்டளைக்கு வெறுமனே ஆமென் என்று தலையாட்டும் ஆட்டுமந்தைகளாகவே நம்மை மாற்றிவிட்டனர். நாம் செல்வ செழிப்பாக வாழ்ந்த காலங்களில், மேற்கத்தியர்கள் வெறும் சண்டை, போர், கலவரம் என்று எப்போதும் கலகமிட்டு வந்தனர். வெறி கொண்ட இவர்கள் கிறிஸ்தவ மதத்தை உலகமெங்கும் பரப்ப வியூகம் வகுத்து போரிட்டு நாடுகளை கைப்பற்றி வந்தனர். இன்றைய கால கட்டத்தில் போர்களை விட்ட பின்னும், கிறித்தவ மதமாற்றும் வெறி மட்டும் இன்னும் அடங்கவில்லை. இதை கிறிஸ்தவ மிஷனரிகள் தொடர்ந்து நாடுகளை ஆக்கிரமிக்கும் வேலையை செய்து வருகின்றன.

உடல்நிலை சரியில்லை, ஜெபம் செய்கிறோம் என்று இயேசுவை நமக்கு அறிமுகபடுத்தினார்கள். இன்று உலகில் உள்ள விசுவாசமான கிறிஸ்தவர்கள் யாவரும் உடல்நிலை சரியில்லாமல் போகாமலா இருக்கிறார்கள் ?  சுகம் தரும் ஜெப கூட்டம் நடத்திய பாஸ்டர், அந்த கூட்டத்தை முடித்துவிட்டு நேராக ஆஸ்பத்திரிக்கு செல்வதை காண்கிறோம். கடன்பிரச்சனையிலிருந்து கர்த்தர் காப்பாற்றுவார் என்று நம்மை இழுத்தார்கள். கடன் தொல்லைகள் இந்த உலகைவிட்டு போய்விட்டனவா ?  உங்களுக்கு என்ன பிரச்சனை என்று ஆரம்பித்தவர்கள் அவர்கள் வலையில் நம்மை சிக்கவைத்தார்கள். இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை பெற்றுக்கொண்டு அங்குள்ள பாதிரியார்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள். இவர்கள் நம் தாய்நாட்டின் பற்றையும், பெருமையும் சீர்குலைத்தவர்கள். விபத்து நேரிட்டால் தூக்கிவிட கூட ஆள்வராத இந்த காலத்தில், வெளிநாட்டினர் ஏன் நம்மேல் இவ்வளவு கரிசனம் காட்டுகிறார்கள், என்று யோசித்தோமா ? இயேசு கிறிஸ்து 2000 ஆண்டில் வருகிறார் என்று எப்படி அப்பட்டமான பொய்களை நம் கண்முன்னே கூறி கணிசமான நம் மக்களை மதம்மாற்றினார்கள்? இதற்கு பயந்து மதம்மாறியவர்களை நாம் இப்போது என்னவென்று அழைப்பது ?

இயேசு என்று ஒருவர் வாழவே இல்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் நிரூபித்தமையால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும், ஆஸ்திரேலியாவில் வாழும் மக்கள் கிறிஸ்தவமதத்தை தூக்கியெறிந்துவிட்டு நாத்திகர்களாக பெரும்பாலோர் மாறிவிட்டனர். மீதமுள்ள கிறிஸ்தவ வெறியர்கள் ஆசிய நாடுகளிலும் அதிக மக்கள் தொகை கொண்ட பாரதத்திலும், அழிந்து வரும் கிறிஸ்துவத்தை காப்பாற்ற, பெருமளவு பணத்தை கொடுத்து கடுமையாக முயற்சி செய்துவருகிறார்கள். இந்த நாடுகளில் சர்ச்சுக்கு செல்பவர்கள் வெறும் 2% பேர்கள்தான் என்று சர்வே புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இயேசு கிறிஸ்து வெறும் கற்பனை பாத்திரமே என்றும், இந்த கற்பனை கதையை உருவாக்கியதும், அதற்கேற்றார் போல் கதை அமைப்புகளை ஏற்படுத்தியதும் புனித பவுல் தான் என்று நிரூபிக்கபட்டுள்ளது. பழங்கால எகிப்திய கடவுளான HORUS ன் கதையை திருடி கிறிஸ்து கதையை புனித பால் உருவாக்கினார் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கிறிஸ்துவுக்கு முன்னர், HORUS, DIONYSIS, MITHRA  என்ற கடவுள்களும் இதே ஏசு கிறிஸ்துவின் கதையை கொண்டனர் என்று வரலாறு கூறுகிறது. பழங்காலத்தில் ஐரோப்பாவில் மதங்களை தழுவியே நாடுகள் இருந்தன. ஆகையால் நாடுகளை பிடித்து இயேசு சாம்ராச்சியத்தை விரிவாக்கவே, மதம்பரப்பும் மிஷனரிகளை உருவாக்கினர். இது வரை, உலகிலேயே அதிகப்படியான, பல்லாயிரம் கோடி மக்களையும் மற்றபிற கால்நடைகளையும் கொன்று குவித்தது, ஏசுவின் தலைமையில் சிலுவைப்போர் என்னும் கொடிய மதமாற்றும் முயற்சிக்காகவே.

பைபிளில் கூறப்பட்டிருக்கிறது என்று கண்மூடித்தனமாக நம்பும் நீங்கள், பைபிளை யார் எழுதினார்கள் என்று ஆராய்ந்ததுண்டா ? அதில் இத்தனை குழப்பங்களும், வடிவங்களும் ஏன் உள்ளன என்று எண்ணியதுண்டா ? பைபிள் அடிமைத்தனம், கொலை, களவு, கற்பழிப்பு என்று அத்தனை குற்றங்களையும் ஆதரிப்பது தெரியுமா? இயேசுவை நம்பாத ஊர்மக்களை கத்தியால் குத்தி கொன்று ஊர்நடுவில் போட இயேசுவே சொன்னதாக பைபிள் கூறுவது தெரியுமா ?   (பரிசுத்தவேதாகமம் உபாகமம் அத்தியாயம் 13:12-16 Dueteronomy; Joshua 7:15). குழந்தைகளை நரபலி கொடுக்கும் பழங்காலத்தவர் எழுதியதே பைபிள். அதிலிருந்து தோன்றியதே கிறிஸ்தவம் என்கிறார் அமெரிக்க வரலாற்று எழுத்தாளர் திரு சாமுவேல் ஹாரிஸ். உலகம் செவ்வகமானது என்று கூறியது பைபிள். இறைவன் ஏழே நாளில் உலகை படைத்தார் என்றும் ஆதாமையும், அவனிடமிருந்து ஏவாளையும் படைத்தார் என்றும் முதல் பாவம் பற்றி கூறி, மனிதர்கள் யாவரையும் பாவிகள் என்றும் கூறுகிறது. இவையனைத்தும் தவறு என்று இன்றைய விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது. இன்னுமா இதை நம்புவது ?

சாதி என்பது அவரவர் செய்த தொழிலை வைத்து வந்தது. சாதி தவறில்லை. ஆனால் சாதி வைத்து ஏற்றத்தாழ்வுகள் செய்வது மாபெரும் தவறு. சாதி தவறென்று அந்நாளைய திருமூலர், சிவவாக்கியர் முதல் இந்நாளைய பாரதியார் வரை தொடர்ந்து உரைத்து வந்திருக்கிறார்கள். இன்று சாதியை குற்றம் சொல்பவர்கள் திருமூலரும், சிவவாக்கியரும், பாரதியாரும் சொல்வதை ஏன் கேட்கவில்லை ? இல்லை இந்த ஏற்றதாழ்வை எதிர்த்து ஏன் குரல் கொடுக்கவில்லை ?  காலில் புண் வந்துவிட்டது என்பதற்காக காலை வெட்டுகிறேன் என்று மதம்மாறுவது மடமை. கிறிஸ்தவர்களுக்குள் எத்தனை உட்பிரிவுகள் இருக்கிறது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரின் சர்ச்சுகளுக்கு செல்லமாட்டார்கள். இதுவும் ஒரு வகை தீண்டாமையே.

நம் தாய் மீது உச்சக்கட்ட வெறுப்பு வரவைப்பதற்காக நாம் கும்பிடும் கல்லை சாத்தான் என்று முத்திரை குத்தி, அதை கும்பிடாதீர்கள் என்ற இவர்கள், இயேசு என்ற ஒரு உருவத்தையும், சிலுவை என்ற உருவத்தையும் வைத்துக்கொண்டு வணங்குகிறார்கள். உருவவழிபாடு தவறென்று கூறுபவர்கள் ஏசு படத்தையும் சிலுவை படத்தையும் இப்போதே தீயிலிட தயாரா ? நம் தாய் சமயம் பல்வேறு வகைகளில் இறைவனை அணுகும் தன்மையை விளக்கி, எதையும் பின்பற்றும் சுதந்திரத்தை கொடுத்துள்ளது. குழந்தைகள் இறைவனை எப்படி வணங்கும், கண்களை மூடிக்கொண்டு ? அவர்களுக்காகவும் முதல்நிலை பக்தர்களுக்காகவும் இறைவனை காட்டவே கல்சிற்பங்கள் பயன்படுத்தபட்டன. இறைவனை வெறும் ஒளியாகவே வணங்கியவர் இராமலிங்க அடிகளார். கல்லிலும் செப்புகளிலும் சிவன் இல்லை, அவன் மனதிலே இருக்கின்றான் என்றார் சிவவாக்கியர். சிவன், சக்தி, விஷ்ணு, கிருஷணர், பிரம்மா என்று இறைவனுடைய பல தொழில்களின் பொருட்டு பல பெயர்கள் வைத்திருந்தாலும், இறைவன் ஒருவனே என்ற அடிப்படை கோட்பாடு நம் தாய்சமயத்தில் வலுவாக உள்ளது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முதலில் கூறியவர் திருமூலர்.

இங்கு அறிந்த உண்மைகள் அனைத்திலிருந்தும், எப்படி வெளிநாட்டினர் தங்கள் ஆதிக்க வெறியை நம் நாட்டில் நிலைநாட்ட குள்ளநரித்தனமாக நம் நாட்டிற்குள் நுழைந்து, திட்டமிட்டு செயல்பட்டு, நம் பாரம்பரியத்தையும் சமயத்தையும் கலாசாரத்தையும் மொழியையும் அழித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாக புலப்படுகிறது. இந்த செய்திகளில் எந்த சந்தேகம் இருப்பினும், வரலாற்றை ஆராய்ந்து பாருங்கள். நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த பெரிய பரிசு நம் பாரம்பரியமும் பண்பாடும். இதில் எண்ணற்ற ஞானம் பொதிந்திருக்கிறது. மடமையினால் இவையாவும் மூடநம்பிக்கை என்று முத்திரை குத்தி நம்மை இழிவு படுத்தி அடக்க நினைக்கிறார்கள். நாம் போடும் தோப்புகரணத்தை Super Brain Yoga என்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்களாம். நம் யோகாவை உணர ஆரம்பித்து, உலகம் முழுவதும் பின்பற்ற தொடங்கி, நமக்கே CD போட்டு விற்கிறார்கள் இவர்கள். இனியும் நம்மை ஏமாற்றும் சர்ச்சுகளுக்கு பணம் கொடுக்க வேண்டுமா ?  பொய் கதைகளை நம்பி ஏமாற வேண்டுமா, அல்லது உண்மையான வரலாற்றை ஆராய்வோமா ? நம் நாட்டிற்குள் நமக்குள் பிளவு ஏற்படுத்தி, நாம் அனைவரும் சண்டையிட்டு கொள்ள வேண்டுமா ?   நம் முன்னோர்கள் கண்டுபிடிக்காதது எதுவுமே இல்லை. இவை யாவற்றையும் நம்மிடமிருந்து திருடிக்கொண்டும், திருப்பி கண்டுபிடித்தும் நம்மை ஏமாற்றி வருகிறார்கள். நம் முன்னோர்கள் நமக்காக இவ்வுலகில் இன்பமாக வாழ பல நெறிமுறைகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றை எடுத்து படிப்போம். உண்மையே சத்தியம். சத்தியமே தர்மம். அந்த தர்மத்தை காப்பதே நம் கடமை. ஏமாற்றுபவர்களை உணர்ந்து ஒதுக்கி வைப்போம். நம் அனைத்து சகோதரர்களையும் ஏசு என்ற இந்த கொடூர மாய துன்பத்திலிருந்து காப்பாற்றுவோம். தாய் மதம் திரும்புவோம். தர்மம் காப்போம்.

வாழ்க பாரதம். வெல்க தர்மம்.

article-poster

Comments

comments

Posted under: பதிவுகள்

Tagged as:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *