ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

இந்தியா மீது தாக்குதல்…. தொடர்கிறது…

இந்தியா மீது தாக்குதல்….  தொடர்கிறது…

பல்லாயிரம் ஆண்டுகளாக செல்வ செழிப்போடு நாம் வாழ்வதை கேள்விப்பட்ட ஐரோப்பியர்களும் அரேபியர்களும் நம் வளத்தை கவர்ந்திட 14ம் நூற்றாண்டிலிருந்து அடுக்கடுக்காய் வந்து குவிந்தனர். இந்த நூற்றாண்டில் அவர்கள் யாவரும் தங்கள் முத்திரைகளையும் மீதங்களையும் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். ஆயினும், இன்னும் செல்வம் கொழிக்கும் நாடாகவே பாரதம் திகழ்கிறது. பாரதம் மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாவது மாபெரும் நாடு.

முகம்மதியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முடிவுறாத யுத்தம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வுலகில் நடைபெற்று வருகிறது. இதில் இருவரும் தங்கள் மதத்தை பரப்பிட பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் மதங்களை பரப்புவதற்கு என்றே மிஷனரிகளை நிறுவி சாதுக்கள் போல் உலகம் எங்கும் நுழைந்து தங்கள் மதமாற்ற வித்தைகளை காட்டி பல்வேறு உலக கலாசாரங்களை அழித்து வருகின்றனர். அதிக மக்கள் தொகை கொண்ட பாரதத்தை இவர்கள் விட்டுவைப்பார்களா என்ன ?

பல்லாயிரம் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலிய மிஷனரிகள், இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் ஊடுருவி மதமாற்றத்தை செய்து பல்லாயிரம் ஆண்டு பெருமை மிக்க பாரத பண்பாட்டையும் கலாசாரத்தையும் அழித்து வருகின்றனர்.

இதை இரண்டரை நிமிட காணொளிக்குள் புகுத்த முயற்சியின் விளைவே இந்த காணொளி. இதை ஒவ்வொரு பாரத திருமகனிடமும் எடுத்து செல்ல உதவிடுங்கள்.

Comments

comments

Posted under: காணொளிகள்

Tagged as: , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *