ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

அர்த்தமற்ற விவாதங்களும் அர்த்தமுள்ள ஹிந்துமதமும் -2

2-inside

கண்டதை வணங்கும் முட்டாள்களே, கல்லிலும், மரத்திலும் இறைவன் இருக்கிறானா ? அருவ வழிபாடுதான் ஏற்றது. இறைவனுக்கு இணை வைக்காதீர்கள் !!

கேட்டு கேட்டு சலித்து விட்ட கேள்வி இது. நிறைய பதிலும் கொடுத்தாயிற்று. இருந்தும் மனதின் ஓரத்தில், ஒருவேளை நாம் இவர்கள் அளவிற்கு இறங்கி போய் எளிதான முறையில் விளக்கம் தர வில்லையோ என்ற ஐயம் இருக்கிறது. அதனால் இந்த பதில்.

பூர்வ ஜென்ம கர்ம பலனால் அர‌பியனுக்கு அடிமை ஆன‌வர்களே. யோசித்து பாருங்கள்.

அருவம் என்பதும் உருவம் என்பது என்ன ? கண்களால் பார்க்க முடிந்தால் அதற்கு உருவம் இருக்கிறது, பார்க்க முடியவில்லை என்றால் அது அருவமானது. சரிதானே ? நம் கண்களுக்கு புலப்படாத எவ்வளவோ கதிர்கள் இவ்வுலகில் இருக்கிறது. விஞ்ஞானிகள் நம் கண்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஒளி அளவுகளையே காணும் சக்தி இருக்கிறது என்கிறார்கள். சொல்லப் போனால் நாம் காண்பதும் நிஜமல்ல. நிஜமென்று நாம் நினைப்பது அவ்வளவுதான். எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது. அதனால்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நிஜம் என்பது ஒரு மாயை என்றார்.

இறைவனை புலன்களால் அறிய முடியுமா ? எந்த கிறிஸ்துவரும், இஸ்லாமியரும் இல்லை என்றுதான் சொல்லவார்கள். சரியா ? புலன்களால் அறிய முடியாத இறைவனை எவ்வாறு புத்தகங்கள் வாயிலாக அறிய முடியும் ? புத்தகங்களை உங்களுக்கு தந்த இறைதூதர்களுக்கு இறைசெய்தி நேரிடையாய் இறக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அதனால் அவர்கள் அதை உணர்ந்திருக்கலாம். ஆனால் உங்களுக்கு அது புரியுமா ? புத்தகம் உங்களுக்கு ஒரு வழிகாட்டி அவ்வளவே. இறைவன் கொடுத்த அறிவை உபயோகப்படுத்தாமல், புத்தகத்துக்குள்ளேயே புழங்கி இருப்பதால் கால் காசுக்கு உபயோகம் உள்ளதா ? உங்கள் அறிவை உபயோகித்து சொல்லுங்கள், புலன்களால் அறிய முடியாத இறைவனை அருவமானவன் என்று எவ்வாறு சொல்கிறீர்கள் ? எப்படி கண்டுப்பிடித்தீர்கள் ? இறைவனை நம்மால் புரிந்துக் கொள்ள முடியும் என்கிறீர்களா ?

அடுத்து இறைவன் எல்லாவிடத்திலும் உள்ளான் என்கிறீர்களா ? எங்கோ ஏழு வாணம் தாண்டி ஒரு சிம்மாசனத்தில் இருக்கிறார் என்கிறீர்களா ? இறைவன் அவன் படைப்புகளை தாண்டி விலகி தனியாய் இருக்கிறாரா ? அனைத்துமாக இருக்கிறாரா ?

ஹிந்துக்கள் இறைவனை வேறு படுத்திப் பார்ப்பதில்லை. அங்கு இங்கு என்று அளவிடாதபடி அவன் எங்கும் இருக்கிறான். சுருங்க சொன்னால் அவனின்றி எதுவுமே இல்லை. ஆக எல்லாமாய் இருக்கும் இறைவனை, எதுவாய் வணங்கினால் என்ன ?

ஒரு ஹிந்து தாழ்மையுடன் கேட்கிறான். ஓ இறைவா நீ எங்கும் இருக்கிறாய், எதிலும் இருக்கிறாய், உன்னை முழுவதுமாய் அறிந்துக் கொள்ளும் ஆற்றல் என்னிடம் இல்லை. ஆக என் மனம் உன் மேல் லயிக்கும் பொருட்டு, இந்த சிறு கல்லில் வா, சிலையில் வா, மரத்தில் வா என்கிறான். தன் மனதுக்கு பிடித்த அழகான சிலைகளை எழுப்பி அதில் இறைவனை இறங்குமாறு ப்ரார்த்திக்கிறான். தீமையை அழிப்பதற்கு ஆக்ரோஷ‌மான சிலைகளை எழுப்பி அதில் இறைவனை இறங்குமாறு ப்ரார்த்திக்கிறான். இதில் என்ன தவறு இருக்கிறது ?

இதற்கு நேர்மாறாக அரேபிய பாலைவன சித்தாந்திகள் என்னச் சொல்கிறார்கள். இறைவனுக்கு இனை வைக்க கூடாதாம், இறைவன் கோபித்து கொள்வானாம். பார் இந்த உருவத்தை வணங்கினாயே, அதுபோலவா நான் இருக்கிறேன் என்று மறுமையில் கேட்பானாம். குழந்தைகள் பார்க்கும் “சோட்டா பீம்” கதைகள் கூட இதற்கு பரவாயில்லையே ? எதை வேண்டினாலும் இறைவன் அல்லவா தந்தருள வேண்டும். எதை நோக்கி நீ கடவுள் அல்லது அல்லா என்றாலும், எது ஆதாரமோ அதை தானே அது சென்று அடையும். இதில் இனை வைத்தால் அவன் கோபம் கொள்ள என்ன இருக்கிறது, இறைவன் என்ன திரைப்பட வில்லனா ? இறைவன் அருவவாதி என்று நீங்கள் மார்தட்டி கொள்வது அவனை நீங்கள் புரிந்துக் கொண்டவர்கள் என்று சொல்வது போல் அல்லவா இருக்கிறது ?

ஒரு உருவம் இல்லாத இறைவன், அதாவது கண்களால் பார்க்க முடியாதவன், ஒரு ஒலி மூலமாகவோஅல்லது ஒரு சொற்கள் மூலமாகவோ மட்டும் எட்டி விடுவானா ? நாம் பார்க்கும் வண்ணம் காட்சி தராத இறைவன், நாம் இறைஞ்சும் வார்தைகளை மட்டும் கேட்டு விடுவானா ?

அவன் கொடுத்த அறிவு. அதை உபயோகித்தால் என்ன தவறு………. யோசியுங்கள் அரேபிய அடிமைகளே !!

Comments

comments

Posted under: அதர்மம் அகற்று, அந்நிய சூழ்ச்சிகள், பதிவுகள், வஹாபிய விஷ வலைகள்

Tagged as: , , , , ,

Comments are closed.