ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

நான் பிராமின் ஆக முடியுமா ?

1462978_182013082004010_939282397_n//முபாரக் அலி நான் பிராமின் ஆகணுமுன்னு கேட்டேனே அதற்க்கு பதில் இல்லையே.பதில் இல்லையா இல்லை உங்களால் முடியாதா? //

அடுத்தவனை நேசிப்பவன். அடுத்தவரிடத்தில் அளப்பரிய அன்புள்ளவன். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தர்மத்தை கடைப்பிடிப்பவன். எல்லா உயிர்களிடத்திலும் பரப்பிர‌ம்மத்தை உணர்பவன் பிராமணன் ஆகிறான். நீங்கள் பிராமின் ஆகவேண்டுமெ என்றால் இந்த குணாதீசியங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வெறும் சடங்குகளோ, சம்பிரதாயங்களோ உங்களை பிராமணன் ஆக்க முடியாது. இப்படித்தான் விஷ்வாமித்திரரும், வால்மிகியும், வியாசரும் பிறப்பில் வேறு குலங்களில் பிறந்திருந்தாலும், தம் குணத்தாலும், பண்பாலும் பிராமணனாய் மாறினார்கள்.

ஒவ்வொரு மனிதனிடமும் நான்கு தன்மைகளும் இருக்க வேண்டும். நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல்,
திபெத்தியர்கள் பிராம்மன தன்மையில் மட்டுமே இருந்துக் கொண்டு சத்ரிய தன்மையை புறக்கனித்ததால்தான் அவர்கள் இன்று சீன‌ர்களுக்கு அடிமையானார்கள். அவர்களின் புன்னிய பூமியே இன்று சீன‌ர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. எந்த தன்மையில் இருக்க வேண்டும் என்பது சூழ்நிலையை பொறுத்தது.

அரேபியர்களை எடுத்துக் கொள்ளுங்கள் அவர்கள் பிராம்மணத் தன்மையை புறக்கனித்துவிட்டு சத்ரிய தன்மையை பிடித்துக் கொண்டார்கள், அதனால் அவர்கள் முட்டாள்களாகவும், வெறிப்பிடித்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிம்மதி என்பதே இல்லை. எப்போது இந்த உலகம் முழுவதையும் தம்மை போலவே மாற்ற வேண்டும், தம் சித்தாந்தங்களையே உலகம் முழுதும் கொண்டு செல்ல வேண்டும் எனும் சத்ரியனுடைய ஆளுமை தன்மையிலேயே பார்க்கிறார்கள். இறைவனைக் கூட ஒரு சத்ரீயனாக அவர்கள் பார்க்கிறார்கள். தன்னை வனங்காதவனை கொல்பவனாகவும், தனக்கு இனையாக யாராக வந்து விடுவார்களோ என்ற பயமுடையவனாகவும் பார்க்கிறார்கள்.

இந்த நான்கு தன்மைகளும், காலம், தேசம், மற்றும் சூழ்நிலைகளுக்கு தக்கவாறு கடைப்பிடிக்கப் பட வேண்டும். கண் முன்னே அதர்மம் நேரும் போது அதை எதிர்த்து போராட நமக்கு சத்ரிய தன்மை வேண்டும், அந்த சூழ்நிலையில் அதுதான் பிரதானமாக இருக்கிறது. அதர்மம் பெருகும் நிலையில் பகவான் வந்து பார்த்துக் கொள்வான் என்று பேசாமல் இருப்பது மிகப்பெரும் அதர்மம்.

பிராம்மண குணம் துறப்பதை வலியுறுத்துகிறது. சத்ரீய குணமோ ஆளுமையில் இருக்கிறது. வைசிய குணமோ பொருள் சேர்ப்பதில் இருக்கிறது. சூத்திர தன்மையோ உழைப்பதில் இருக்கிறது. இதில் நான்கு தன்மைகளுமே அத்யாவசியம் என்றாலும், பிராமணத் தன்மை இருப்பதிலேயே சிறப்பானது. அதில் எந்த ஐயமும் இல்லை. அது வாளுக்கு அடிபணியாத தன்மை. அச்சம் என்ற‌ உடல்சார்ந்த தன்மையை கடந்து, ஆத்மா என்ற யாராலும் அழிக்க முடியாத, அளப்பறிய ஆற்றலாகிய அந்த சத்திய மற்றும் நித்திய‌ தன்மையை உணர்ந்த நிலை அது. உண்மையான பிராமண‌ன் யாருக்குமே அஞ்சுவது இல்லை, அடிபணிவதும் இல்லை. சனாதன தர்மத்தின் நோக்கமே இந்த தன்மையை நோக்கி செல்வதுதான். உடலை சுற்றி ஒரு நூலை மட்டும் கட்டிக் கொண்டு நான் பிராமணன் என்று திரிவது வேடிக்கையானது.

எந்த தன்மையில் இருப்பது என்பது காலத்தை ஒட்டியே இருக்கிறது. தேசத்தை அந்நிய நாடு ஆக்கிரமிக்கிறது எனும் சமயத்தில் அதை கண்டு கொள்ளாமல் ஆன்மீக விஷயங்களில் இருப்பது அதர்மம். அந்த சூழ்நிலையில் ஒவ்வொருவரும் தம் நாட்டுக்காக போராடுவதே தர்மம். மஹாபாரதத்தில் துரோனாச்சாரியார் போன்றவர்கள் போரில் பங்கெடுப்பது இதைத்தான் குறிக்கிறது. அமைதி நிலை நாட்டப்பட்ட பின் பிராமண தன்மையை பிடித்துக் கொள்வது ஒவ்வொருவரின் ஆதார கடமை. அது மானிட பிறவியின் அடிப்படை நோக்கம்.

அதே நேரத்தில் வீர‌ சிவாஜியை பிராமின் ஆக்கியிருந்தால் இன்று ஹிந்துவாக எத்தனை பேர் இருந்திருப்பார்கள் என்று தெரியாது. அப்படி யாரேனும் முயன்றிருந்தால், ஹிந்துக்களுக்கு அத்தகைய ஒரு துரோகத்தை யாரும் செய்திருக்க முடியாது. அதர்மம் பெருகியிக்கும் நிலையில் சத்ரீய தன்மையை அனைவரும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சிவாஜி அதைதான் செய்தார், அதர்மத்தை வேரோடு பிடுங்கினார். இப்போது மீண்டும் அது பல களைகளாக முளைக்க தொடங்கிவிட்டது. இன்றைய சூழ்நிலையில் நமக்கு பெரிதும் தேவை சத்ரீய தன்மைதான்.

Comments

comments

Posted under: பதிவுகள்

Tagged as: , , , ,

Comments are closed.