ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

இறைவன் உருவம் உள்ள‌வனா ? அருவமானவனா ?

downloadஒரு இஸ்லாமியரின் கருத்து

பிரபஞ்சத்தை படைத்த ஏக இறைவனுக்கு காலிக் என்ற பெயரும் இருக்கிறது ! இதை அப்படியே சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் விஷ்ணு என்று தான் வரும் ! அதனால் விஷ்ணுவுக்கு மனைவிகள் உண்டு ! அவர் படுத்துக் கிடப்பார் என்று பொருள் அல்ல ! விஷ்ணுவின் உருவம் எங்களுக்கு தெரியாது ! //

என் விளக்கம்
உண்மைதான். விஷ்ணுவை நாங்கள் நினைப்பது போல் நீங்கள் நினைக்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் விஷ்ணுவுக்கு மனைவிகள் உண்டு, பாம்பு படுக்கை உண்டு, பாற்கடல் உண்டு, பல்லாயிரம் கோடி பக்தர்கள் உண்டு, அவற்றுக்கெல்லாம் பின் பல காரணங்களும் உண்டு. அதைப்பற்றி அறிந்துக் கொள்ள நிச்சயமாய் உங்களுக்கு விருப்பமும், நேரமும் இருக்காது.

இறைவனுக்கு உருவமற்றவன் என்று வேதங்களே குறிப்பிடுவதாய் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கிறீர்கள். இறைவன் உருவமற்றவன் என்று வேதங்கள் சொல்வதால், வேதாந்தமும் குரானும் ஒன்றாகி விடுமா நண்பரே ?
பல்வெறு வகையில் உருவமற்ற வழிபாடு என்பதே மனிதனுக்கு இயலாத ஒன்று என்பதை குறித்து நான் ஏற்கனவே தெளிவாக இதற்கு முன் எழுதியுள்ளேன். இறைவனின் தன்மையை ஹிந்து தர்மத்தில் பரம், வ்யூஹம், விபவம், அர்சா, அந்தர்யாமி என்று பிரிக்கிறார்கள். இதில் கடைசியில் வரும் அந்தர்யாமியில் இறைவன் உருவமில்லாத தன்மையோடு ஒவ்வொரு உயிரின் ஆதாரமாக இருக்கிறார். இதை குறித்து பிறகு தனியாக விரிவாக எழுதுகிறேன்.

இறைவன் ஒருவன் தான் என்று சொல்லும் வேதம், இறைவனின் உருவத்தை நம் கண்களால் காண முடியாது என்று சொல்லும் அதே வேதம் சொல்கிறது,

एकम् सत्, विप्राः बहुधा वदन्ति,
“ஏகம் சத் விப்ர பஹுதா வதந்தி” என்கிறது. [ ரிக்வேதம் 1:164:46 ]

அதாவது இறைவன் ஒருவன் தான் ஆனால் பண்டிதர்கள் அவனை பலவாக வணங்குகிறார்கள் என்று சொல்கிறது.

இந்த இடத்தில் குரான் சொல்வதாய் உங்கள் வஹாபியம் என்ன சொல்கிறது ? இறைவனுக்கு இனை வைக்காதே என்கிறது. ஆனால் வேதமோ பண்டிதர்கள் அதாவது அறிவாளிகள் அவனை பலவாக வணங்குகிறார்கள் என்கிறது. நன்றாக மீண்டும் பாருங்கள் முட்டாள்கள் என்று சொல்லவில்லை. விஷயம் தெரியாதவர்கள் என்று சொல்லவில்லை. நரகத்து செல்லக்கூடியவர்கள் என்று சொல்லவில்லை. படித்தவர்கள், அறிவாளிகள் என்று பொருள்பட சொல்கிறது.

உங்கள் குரான் சொல்வது என்ன ?

அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும்.

وَإِذْ قَالَ لُقْمَانُ لابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيم

இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ”என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,”” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக) (அல்குர்அன் 31:13)

ஆகையால் வேதத்தை உங்கள் தேவைக்காகவும், உங்கள் சித்தாந்தத்தை மெய்பிக்கவும் உபயோகிக்காதீர்கள். வேதம் இறைவனின் உருவத்தை நம் கண்களால் காண முடியாது என்கிற பொருள்படி கூறினாலும், அந்த பரம்பொருளை நம் சிற்றறிவுக்கு எட்டியவாறு பல்வெறு வகையில் வழிபாடு செய்வதை பாராட்டுகிறது. உருவமற்ற வழிபாடு சாத்தியமில்லை என்பதை இதன் மூலம் வேதங்களும் மெய்ப்பிக்கின்றன. பல விதமான வகையில் அறிவாளிகள் உருவமற்ற இறைவனை வணங்குகிறார்கள் என்று அவை மிகத் தெளிவாக சொல்கின்றன

Comments

comments

Posted under: பதிவுகள்

Tagged as: , , , , , , , , , ,

Comments are closed.