ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

யேசு (தொலைப்பேசியில்) அழைக்கிறார்

jesus-calls-1யேசுவிடம் இருந்து ஒரு போன் கால் விடிகாலை ஒரு நான்கு மணி இருக்கும் ட்ரிங் ட்ரிங் என்று மணி அடிப்பது போல் இருந்தது… நான் எங்கிருக்கிறேன் என்று கூட தெரியாமல் தொலைப்பேசியை எடுத்தால், “ஜீசஸ் பேசுகிறேன் நல்லா இருக்கீங்களா” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எந்த ஜீசஸ் ?!! எங்கிருந்து என்று குழறினேன் ? எத்தனை ஜீசஸ் இருக்கிறார்கள், நான் தான் பரலோகத்திலிருந்து பேசுகிறேன் என்றார். “அப்படியா ? நீங்கள் இருக்கிறீர்களா ? உங்களை பற்றி சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று கூட நினைத்திருந்தேன். என்னை மன்னியுங்கள்” என்றேன். “மன்னிக்க என்ன இருக்கிறது. அவை கட்டுக்கதைதான்” என்று என்னை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தினார் ஜீசஸ். எனக்கு ஒன்றும் புரியவில்லை, நேற்று இரவு யாரேனும் நான் உறங்கத்தொடங்கையில் என் வாயில் எனக்கே தெரியாமல் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள மினி குவாட்டரை ஊற்றி விட்டார்களா என்று யோசித்தவாறே, “என்ன ஐயா சொல்கிறீர்கள், கோடானு கோடி மக்கள் அப்படித்தானே நம்புகிறார்கள் ?” என்று கேட்டேன். ஜீசஸ் கல கல வென்று சிரித்தார். “பலருக்கு பலவிதமான வியாபாரம் இருக்கும், பலவிதமான சுயநலம் சார்ந்த நோக்கங்கள் இருக்கும், அவர்கள் என்னை பலவாறு சித்தரித்து சம்பாதிப்பதை, ஆறுதல் அடைவதை, நான் ஏன் தடுக்க வேண்டும் ?” என்றார். “அப்படியென்றால் அந்த சிலுவையில் அறையப் பட்டது, இரத்தம் சிந்தியது, பாவிகளை பரிசுத்தம் செய்தது” என்று நான் கேட்கத் தொடங்க, என்னை பரிவாய் தடவிக் கொடுத்தார் ஜீசஸ். தொலைப்பேசி மூலம் எப்படி இவர் என்னை தொட முடிகிறது, என்று நான் அதிசயித்தாலும், இவர்தான் ஆண்டவர் ஆயிற்றே நிறைய அதிசயங்கள் புரிபவர் ஆயிற்றே என்று என் உள்மனம் பதில் சொன்னது. “இந்த பிரபஞ்சத்தில் பல கோடி அண்டங்களும், உயிரின‌ங்களும் இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் ஆதாரமான நான் ஒவ்வொரு கிரகத்துக்கும் சென்று அங்குள்ள சிறு சிறு கூட்டங்களுக்காக என் ரத்தத்தை வைத்து சுத்தம் செய்யத் தொடங்கினால் எத்தனை பில்லியன் லிட்டர் ரத்தங்களை நான் சிந்திக்கொண்டு இருக்க வேண்டும்” என்று கேட்டார் ஜீசஸ். “ஐயா, யேசுவின் ரத்தத்தில்தான் பாவங்கள் கழுவப்படுகின்றன என்று சொல்கிறார்களே” என்று கேட்டேன். “முட்டாளே உனக்கு அறிவை கொடுத்திருக்கிறேன் அல்லவா ? நீ செய்யும் நல்ல செயல்களால் உன் பாவம் கழுவுப்படுமா, அல்லது என் இரத்தத்தால் கழுவப்படுமா ? என் ரத்தம் என்ன ‘டெட்டாலா'” என்று கோபித்துக் கொண்டார் ஜீசஸ். “ஐயா நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கோபித்துக் கொள்ளுங்கள், ஆனால் நீங்கள் உமாசங்கருக்கு மெஸ்ஸெஞ்சர் அனுப்பி உத்தர்கண்டில் பல உயிரை எடுக்கப் போகிறேன் என்று சொன்னது சரியே இல்லை. அதுவும் அவரிடம் அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொன்னது சுத்தமாய் சரியில்லை. ஹிந்துவாக பிறந்து எங்கள் நம்பிக்கைகளை தொடர்வதாலும், ஞானஸ்தானம் வாங்காமல் இருப்பதாலும், நாங்கள் உங்கள் குழந்தைகள் இல்லையா ?” என்று தைரியமாய் கேட்டேன் நான். ஞானஸ்தானம் என்றால் என்ன ? என்றார் ஜீசஸ். ஐயா எப்படி விளக்குவது ? உங்கள் சுவர்கத்தை மனிதர்கள் அடைவதற்கு நீங்கள் தரும் பயனச்சீட்டு போல. பல குழுக்கள் இப்படி பலவிதமான பயனச்சீட்டுகளை வைத்திருக்கிறார்கள் என்று நான் சொல்ல சொல்ல, ஜீசஸ் முகம் இறுகியது. “முட்டாள்தனமாக கேள்வி கேட்காதே, அறிவை உனக்கு எதற்கடா நான் அளித்துள்ளேன் ? உயிர்களில் எனக்கு ஏதடா பேதம் ? அனைத்து உயிர்களிலும் நான் உள்ளேன் என்று கீதையில் நான் சொல்லியுள்ளேனே” என்றார் ஜீசஸ். “ஐயா அது கிருஷ்ணர் அல்லவா ? நீங்கள் ஜீசஸ் அல்லவா” என்று நான் கேட்கையில் “பிறகு கூப்பிடுகிறேன், அவசரமாய் நான் செல்லவேண்டும் எனக்காக உங்கள் நாட்டிலும் பல கோடி மக்கள் நோன்பு இருக்க தொடங்குகிறார்கள்” என்று கிளம்பினார் ஜீசஸ், கிளம்பும்போது, அவரின் வெள்ளைக்கார தோல் நீல வண்ணத்தில் மாறத் தொடங்கியது, நான் அது உருவம் உள்ளதா, இல்லாததா ? என்று யோசித்தவாறே திடுக்கிட்டு விழித்திட்டேன்

Comments

comments

Posted under: பதிவுகள்

Tagged as: , , , , , ,

Comments are closed.