ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்

The questionnaire1) தர்மத்தை யார் காக்கிறார்களோ, தர்மம் அவரை காக்கிறது. இது வேத சத்தியம். நம்மை தர்மம் காக்கும் இது உறுதி.
இதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுவோம்.

2) தர்ம விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒரு வியாபார விடயம் அல்ல. நாம் ஏதோ ஒரு விற்பனையாளரும் அல்ல. நாம் ஆயிரமாயிரம் ஆண்டு கால தர்மத்தை, அழிக்க வந்துள்ள அந்நிய சக்திகளை எதிர்த்து விழிப்புணர்வை உண்டாகும் போராளிகள் என்பதை நினைவில் வைப்போம். நாம் எதையும் எதிர்ப்பார்க்காமல் நம் மூதாதையரின் தர்மத்தை நிலை நிறுத்த வந்த காவலர்கள். . எல்லாம் வல்ல இறைவன் நம்மோடு துணை நிற்கிறான். நம்மை எந்த சக்தியாலும் ஒன்றும் செய்ய முடியாது.

3) நம்மிடம் இதை வாங்குபவர் ஒரு இயந்திரமல்ல, உயிரோட்டமுள்ள ஒரு மனிதர். ஆகையால் நாம் கொடுப்பவர்களிடத்தில் கணிவோடு கொடுப்போம். ஒரு புன்னகையோடு கொடுப்போம். இது வாங்குபவரிடம் ஒரு உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும். கிடைக்காத பொருளை நாம் கொடுப்பது போல் கொடுப்போம்.

4) நமக்கு தெரிந்தவர்கள் வந்தால் தயக்கமோ, வருத்தமோ கொள்ள வேண்டாம். அவரையும் கொடுப்பதற்கு துனைக்கு அழைப்போம். ஒன்று கூட வருவார், இல்லையென்றால் மறைந்து விடுவார்.

5) யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்போம். நமக்கு வீரியத்தை விட காரியமே முக்கியம்.

6) சிறுவர்களுக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. விநியோகம் செய்கையில் இளைஞர் மற்றும் நடுத்தர வயதினருக்கு முதலிடம் தருவோம்.

7) இது எந்த அமைப்பு என்று யாரேனும் கேட்டால், தெரியாது என்று சொல்லுவோம். உங்களை போலத்தான் நானும் இதை படித்து பார்த்தேன், மிகவும் உண்மையாக இருந்தது. இதை விநியோகிப்பது என் கடமை என்று தோன்றியதால் இதை நகல் எடுத்து செய்கிறேன் என்று சொல்லுவோம். இது கேட்பவருக்கு, பிரசுரத்தை படிக்க ஆர்வத்தை தூண்டும். அதில் பங்கு கொள்ளவும் அவரை செய்ய வைக்கும்.

படித்து விட்டு பாராட்டுபவரிடம், நன்றியை தெரிவிப்போம். எத்தனையோ பேர் வாங்கிச் செல்கிறார்கள், ஆனால் நீங்கள் பாராட்டுகிறீர்கள், நீங்கள் விவேகம் உள்ளவர் என்று சொல்லுவோம். அவர் ஒத்துழைப்பது போல் இருந்தால், நாம் இணைந்து இதை விநியோகிப்போம் என்று சொல்லுவோம்.

9) அரிதாக ஏதேனும் எதிர்ப்புகள் வந்தால், நம் வழக்கறிஞர்களின் தொலைப்பேசியை வைத்துக் கொள்வோம். வேறு வழி இல்லை எனும் பட்சத்தில் பயன் படுத்துவோம்.

10) விநியோகித்து முடித்த பிறகு, நாம் வெறும் கருவி, இறைவன் நம்மை இதை செய்ய வைத்தான் என்று இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

Comments

comments

Posted under: பதிவுகள்

Tagged as: , , , , , ,

Comments are closed.